Nov 20, 2018

நவதாராளவாதத்துக்கு எதிரான இறையாண்மையைப் பரப்புதல்!

நவதாராளவாதத்துக்கு எதிரான இறையாண்மையைப் பரப்புதல்!

மூன்று வாரங்கள் நீடித்த பரிகாசமான அரசாங்கமும் நாடாளுமன்றத்துக்குள் காணப்பட்ட மூர்க்கத்தனமான செயற்பாடுகளும், பாரதூரமான அரசியல் நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளியுள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகம், அரசமைப்புச் சட்டபூர்வத்தன்மை ஆகியன தொடர்பான கேள்விகளிலேயே, ஊடகங்களின் கவனமும் பொதுமக்களின் கலந்துரையாடலும் கவனஞ்செலுத்துகின்ற போதிலும், இந்த நெருக்கடியின் அடிப்படையான காரணங்களாக, பல தசாப்தங்களாகத் தொடர்ந்த நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக உருவாக்கப்பட்ட ஸ்திரமற்ற நிலைமையும் உடைமையழிப்பும் காணப்படுகின்றன.

கடந்த சில வாரங்களில், ராஜபக்‌ஷவுக்குச் சார்பான கொள்கை வகுப்பாளர்கள், நவதாராளவாதத்தைப் பற்றிய திரிபுபடுத்தப்பட்ட புரிதலை வெளிப்படுத்தி, தங்களது தேசியவாதப் பிரசாரத்தை முன்னெடுத்தனர். பொருளாதாரப் பேரழிவு, ராஜபக்‌ஷவின் நியமனத்தைத் தேவைக்குரியதாக மாற்றியது என அவர்கள் வாதிடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நவதாராளவாதத் தாக்குதல்கள், இலங்கையின் இறையாண்மையைப் பலவீனப்படுத்தியுள்ளன என அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் கருத்தின்படி, இலங்கையின் சொத்துகளின் விற்பனையை நிறுத்துவதன் மூலமும் நாட்டின் இறையாண்மையைக் காப்பதன் மூலமும் தான், பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட முடியுமென்கின்றனர். ஜனநாயகத்துக்கு எதிரான ராஜபக்‌ஷவின் அரசியலை ஒரு பக்கமாக விடுத்து, நவதாராளவாதம் பற்றிய அவர்களின் பிழையான புரிதலை, இப்பத்தி கேள்விக்குட்படுத்துகிறது.

ராஜபக்‌ஷ குழுவினரின் இறையாண்மை பற்றிய கலந்துரையாடல், வெளிநாட்டு வெறுப்புடனான தேசியவாதத்தை வெளிப்படுத்துவதோடு, நவதாராளவாத முதலாளித்துவம் காரணமாகச் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பாரியளவு உடைமையழிப்பைப் பற்றித் தெரிவிப்பதில்லை. எனவே, இக்கலந்துரையாடல் ஆபத்தானது.முரண்பாடுகள்

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, சர்வதேச நிதியியல் மய்யத்தையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் ஊக்குவிப்பதில் ஆக்ரோஷமாகக் காணப்பட்டமை என்பது உண்மையானது. ஆனால், நிதிமயமாக்கம், வர்த்தகத் தாராளமயமாக்கல், சர்வதேசத்தால் நிதியளிக்கப்பட்ட பாரிய உட்கட்டமைப்பு/ நகர அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் ஆகியன, ராஜபக்‌ஷவின் பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தின் மத்திய அம்சங்களாக இருந்தன என்பதில், நாம் தெளிவாக இருக்க வேண்டும். இப்படி இருந்தாலும், ராஜபக்‌ஷவின் துறைமுக நகரம்,

ஷங்ரி-லா, ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட ஏனைய வேலைத்திட்டங்கள் உள்ளடங்கலான பொருளாதாரக் கொள்கைகள் தவிர்க்கப்படும் அதே நேரத்தில், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் ஆகியன குத்தகைக்கு வழங்கப்பட்டமை, சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஆகியன, ராஜபக்‌ஷ தரப்பினரால் “நவதாராளவாதம்” என வர்ணிக்கப்படுகின்றன.

அதைவிட முக்கியமாக, நவதாராளவாதத்தின் அவ்வளவு குறுகிய வர்ணனையென்பது போதுமானதன்று. ஏனெனில், மக்களின் வாழ்வைப் பாதிக்கின்ற பொருளாதாரச் செயன்முறைகளையும் இயங்கியலையும் பற்றி இது கவனஞ்செலுத்தவில்லை. அரச சொத்துகளும் தேசிய செயற்றிட்டங்களும் வெளிநாட்டு அமைப்புகளுக்கு வழங்கப்படுகின்றன என்பது பற்றி முக்கியத்துவம் வழங்கும் அவர்களது நவதாராளவாதத்தின் வடிவம், பொருளாதார தேசியவாத அரசியலுக்கு ஒப்பானதாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பொருளாதாரச் செயற்பாட்டில், வெளிநாடு அல்லது தேசிய முதலுக்கு ஆதாயமடைகிறார்களா என்பதைப் பற்றிக் கவனஞ்செலுத்தும் அவர்கள், குறித்த முதல் பற்றியும், சுரண்டலும் உடமையளிப்பும் பற்றியுமான விமர்சனங்களை வழங்க மறுக்கிறார்கள்.

நிதி மூலதனம்

மார்க்ஸிஸ புவியியலாளர் டேவிட் ஹார்வி உள்ளிட்ட ஏனையோரால் வெளிப்படுத்தப்பட்டதைப் போன்று, நவதாராளவாதம் என்பது, நிதி மூலதனத்தின் வர்க்கச் செயற்பாடொன்றாகும். முதலாளித்துவ உற்பத்திச் செயன்முறையில், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு மேலதிகமாக, நவதாராளவாத யுகத்தில் நிதி மூலதனமானது, மக்களின் செல்வத்திலிருந்தும் சொத்துகளிலிருந்தும் உரிமைத் தகுதிகளிலிருந்தும் அவர்களைப் பறிக்கிறது. இதற்கு மேலதிகமாக, காணிகளையும் வளங்களையும் மக்களிடத்திலிருந்து பறிப்பதற்கு உட்பட, இச்செயற்பாடுகளுக்குத் தேவையான போது பலம் பயன்படுத்தப்படுகிறது.

மேலதிகமாக, நவதாராளவாதப் பூகோளமயமாக்கலின் கீழ், ஒவ்வொரு நாட்டினதும் நிதி, வங்கியியல் துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, பூகோள நிதியியல் திட்டமொன்று உருவாக்கப்படுவதால், பூகோள, தேசிய நிதி மூலதனத்துக்கு இடையிலான வித்தியாசம் தொடராது. இதில், பூகோள நிதியியல் நிறுவனங்களும் அவற்றின் உள்ளூர்ப் பங்காளர்களும் உட்பட, நிதி மூலதனமே அடைவுகளைப் பெற, உழைக்கும் மக்கள் தோல்வியடைகின்றனர்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து எட்டாம் (1978) ஆண்டு கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து, நிதியியல் நிறுவனங்களும் சில வங்கிகளும் கூட தகர்ந்துபோவதால் தூண்டப்படும் நெருக்கடிகள், அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம், இலங்கையின் நிதித்துறை விரிவடைந்து வருகிறது. கடந்த ஒரு தசாப்தகாலமாக, நிதியியல் துறையின் வளர்ச்சி, கணிசமானளவு துரிதமாகியுள்ளது. குறிப்பாக, போர் முடிவடைந்த பின்னர், பூகோள மூலதனத்தின் உள்வருகை ஆகியவற்றின் பின்னர், இந்நிலைமை உருவாகியுள்ளது. இலங்கையிலுள்ள பல நிதியியல் நிறுவனங்கள், உள்ளூர் நிதியாளர்களால் உருவாக்கப்பட்டு, உரிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பெரிய வங்கிகள், அரசால் உரிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிதியியல் நிறுவனங்களும் வங்கிகளும், பூகோள நிதியியல் கட்டமைப்பொன்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, பூகோள நிதியாளர்களிடமிருந்து முதலீடுகளும் கடன்களும் பெறும் வகையில் காணப்படுகின்றன. அவ்வாறான நிதி மூலதனமே, குத்தகைக்கு வழங்குதல், நுண் நிதி, அடைவு வைத்தல் வணிகங்கள் ஆகியவற்றின் பிரதான விரிவுபடுத்தலின் பின்னணியில் உள்ளதோடு, அதிகரிக்கும் கடன் நிலைமைக்கு மத்தியில், உழைக்கும் மக்களின் உடைமையழிப்பில், இவையே அதிகளவு பொறுப்பானவையாக உள்ளன.

எங்களது ஞாபகத்திறன், குறைந்தளவிலேயே உள்ளது போலுள்ளது. நிதி மூலதனம் பெருகுவதற்கான வழியேற்பாடுகளை வழங்குவதில், ராஜபக்‌ஷ அரசாங்கம் முன்னின்றது. கொழும்பு பங்குச் சந்தையைப் பெருப்பிப்பதற்காக ஊழியர் சேமலாப நிதியைத் திசைதிருப்பியமை, காப்புறுதித் துறையின் விரிவாக்கம், போரின் பின்னர் பாரிய சர்வதேசக் கடன்களை அரச வங்கிகள் பெறுவதற்கான அழுத்தம் போன்ற, மூலதனச் சந்தைகளின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், தேசிய பொருளாதாரத்தை மிகப்பாரிய அளவில் நிதிமயமாக்குதல் நோக்கிச் செலுத்தியமையோடு, பூகோள நிதி மூலதனத்தோடு நாட்டை ஒருங்கிணைக்க வைத்தது. உள்வந்த பெருமளவிலான பூகோள மூலதனங்கள், தொடர்மாடி வீடுகள் உள்ளிட்ட மனை விற்பனைத் துறையில் முதலிடப்பட்டன. கொழும்பின் நகரமயமாக்கல், அழகுபடுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் கொள்கைகளால், இவை ஆதரவளிக்கப்பட்டன.

பங்குச் சந்தையின் வளர்ச்சி, மனை விற்பனைத் துறையின் விரிவாக்கல் ஆகியன, ஊகத்தின் அடிப்படையிலும் நிதி மூலதனத்துக்கான பெருமளவு இலாபத்தை ஈட்டிக் கொடுப்பதன் அடிப்படையிலும் காணப்பட்டன. ஆனால், மீள மீள முன்வைக்கப்பட்ட ஊக அடிப்படையிலான வளர்ச்சிகள் உடைந்து, சமூக நலன்புரித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டுக் குறைப்பும் அரச சேவைகள் தனியார்மயப்படுத்தப்படுவதையும் நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டதால், உழைக்கும் வர்க்க மக்கள், உடைமையழிக்கப்பட்டனர்.

நவதாராளவாதச் சொத்துக் குவிப்பு என்பது, இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் போன்ற, பொதுமக்களின் உரித்துகளை இலக்குவைக்கிறது. கல்வியின் தனியார்மயப்படுத்தலும் வர்த்தமயப்படுத்தலும், தனியார் சுகாதார, சுகாதாரக் காப்புறுதி சேவைகளின் ஊக்குவிப்பும், இலாபமீட்டும் வணிகங்களுக்கான புதிய வழிகளாக மாறியுள்ளன.

இந்தப் பின்னணியில், குறிப்பாகக் கடந்த தசாப்தகாலத்தில், நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகரித்த வண்ணமிருக்கிறது. வருமானமும் செல்வமும் ஆகியவற்றில் காணப்படும் வித்தியாசம், ஏற்றுக்கொள்ளப்படத்தக்க சமூக நலன்புரிக்கான அணுக்கம் ஆகியவற்றில், இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. மறுபக்கமாக, நிதி, கட்டுமானத் தொழிற்றுறைகளின் மூலமாக, சிறிய செல்வந்த வர்க்கமொன்று உருவாகி, தங்களுடைய மிகப்பெரிய மாளிகைகளையும் சொகுசு வாகனங்களையும் காண்பிக்கின்றன.

பொருளாதாரத் தேசியவாதம்

உண்மையில் பார்த்தால், போருக்குப் பின்னரான ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளோடு ஒப்பிட்டால், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரான சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளோடு வித்தியாசத்தைக் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாகத் தான், பொருளாதாரத்தின் நவதாராளவாதப் பாதைக்கான ராஜபக்‌ஷவுக்கு ஆதரவானவர்களின் விமர்சனங்கள், பலவீனமாக உள்ளன. இறையாண்மைக்குப் பாதிப்பு என்ற வகையான, தேசியவாத வாதங்களைப் பிடித்துக்கொண்டிருக்க, அவர்களுக்குக் கட்டாயமேற்பட்டுள்ளது. முரண்நகையாக, இறையாண்மைப் பிணைமுறிகளை விற்கும் முன்னெடுப்புகளை, ராஜபக்‌ஷ அரசாங்கம் தான் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் ஆரம்பித்தது என்பதை, அவ்வாறான ஆதரவாளர்கள் கருத்திற்கொள்வதில்லை. அடுத்த சில ஆண்டுகளில், பில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்கள், இறையாண்மைப் பிணைமுறிகளுக்காக மீளச்செலுத்தப்பட வேண்டியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம், பூகோள நிதி மூலதனத்தால் ஆதரவளிக்கப்படும் ஏனைய தரப்படுத்தல் முகவராண்மைகளுக்கு, மேலதிக நவதாராளவாத சீர்திருத்தங்களை உந்துவதற்கு, இக்கடன்கள் வாய்ப்பை வழங்குகின்றன.

இறையாண்மையைப் பற்றிய தேசியவாத வாதங்கள், வர்த்தகத்திலும் முதலீட்டிலும் கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள், இலங்கையின் சொத்துகளும் செல்வங்களும் எவ்வாறு விற்கப்படுகின்றன ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால், உள்ளூர் நிதியாளர்களால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் காரணமாகச் சுரண்டலும் உடைமையழிப்பும் இடம்பெறுவதைப் பற்றியோ அல்லது உள்ளூர், வெளிநாட்டு மூலதனங்கள் இணைதல் பற்றியோ, அவர்களிடம் பதிலில்லை. மேலதிகமாக, மூன்று வாரங்களாக நீடித்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் பொருளாதாரக் கருத்துகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது என்ற மட்டத்திலேயே காணப்பட்டது. இக்கருத்துகள், ராஜபக்‌ஷவின் கொள்கை பரப்பாளர்களால் தவிர்க்கப்பட்டிருந்தன.

இந்த முரண்பாடுகள் ஒருபக்கமாகவிருக்க, ராஜபக்‌ஷவுக்கான ஆதரவான இந்த விமர்சனங்களின் உண்மையான கருத்து, நவதாராளவாதம் பற்றியோ அல்லது மக்களின் இறையாண்மை பற்றியோ இல்லை. ஏனெனில், உண்மையான எந்தவொரு விமர்சனமும், மக்களின் சுரண்டலும் உடைமையழிப்பும் பற்றிக் கவனஞ்செலுத்தியிருக்கும். எனவே இவ்விமர்சனங்கள், தேசம், தேசிய இறையாண்மை ஆகியன பற்றிய அவர்களின் கருத்துருவாக்கம் பற்றியதே. இவ்விரு விடயங்களும், ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கான தேசியவாத ஆதரவை உயர்த்துவதற்கான முயற்சியாகும்.

அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான இந்தத் தேசியவாதப் பிரசாரம், வெளிப்புறத் தலையீடு என்ற வெளிநாட்டவர்களுக்கு எதிரான அச்சத்தை அடிப்படையாகக் கொண்டதோடு, அவ்வாறான வெளிப்புற அழுத்தங்களை எதிர்த்து நிற்கக்கூடிய தேசியவாத நடவடிக்கைக்குப் பொருத்தமான பலமான தலைவராக, மஹிந்த ராஜபக்‌ஷ காண்பிக்கப்படுகிறார். ஏகாதிபத்தியத் தலையீட்டுக்கு எதிரான சில இடதுசாரிகளும், இவ்வாறான பிரசாரத்தில் வீழ்ந்துபோனார்கள். ஏனென்றால், வெளிப்புறச் சக்திகளுக்கான தமது எதிர்ப்பு, ஜனநாயகம், சமத்துவம், பொருளாதார நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் காணப்பட வேண்டுமென்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். கவலைக்குரிய விதமாக அவர்கள், ஜனநாயகம், மக்களின் பொருளாதார வாழ்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, தேசிய இறையாண்மை என்ற பெயரில் தாக்குதல்களை மேற்கொள்ளும் அதிகாரவய தேசியவாதியின் கீழ் வீழ்ந்துவிட்டார்கள்.

சிங்கள - பௌத்த தேசியவாதமாக இருந்தாலும், தமிழ்த் தேசியவாதமாக இருந்தாலும், தேசியவாதமென்பது, தேர்தல் பிரசாரங்களுக்கான வலிமையான சக்தியாகும். இனச் சமூகங்களைப் பிளவுபடுத்தி, தேர்தல் ஆதரவை வலுப்படுத்த அது பயனுள்ளது என்பது, காலங்காலமாக நிரூபிக்கப்பட்டதாகும். ஆனால் அந்தச் செயன்முறையில், அச்சத்தையும் எதிர்ப்புக் கொள்கைகள் மீதான வன்முறையையும் ஏவுகிறது. அவ்வாறான தேசியவாதப் பிரசாரங்களால் தூண்டப்படும் வெளிநாட்டு வெறுப்பு, “உள்ளுக்குள் காணப்படும் எதிரிகள்” மீதான பழிவாங்கலாக அமையும். அவ்வாறானவற்றில், நாட்டுக்குள் காணப்படும் ஒன்று அல்லது வேறு சிறுபான்மைச் சமூகம் மீதான தாக்குதல்கள் அல்லது கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லிம் சமூகம் மீதான தாக்குதல்கள் ஆகியன உள்ளடங்குகின்றன.

காத்திரமான பொருளாதார மாற்றுத் திட்டமொன்று இல்லாத நிலையில், ராஜபக்‌ஷவின் பொருளாதாரம் நிலைபெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின், இறையாண்மை பற்றிய தேசியவாதப் பிரசாரங்கள், பிரிவினை பற்றிய அச்சமூட்டலுடன் இணைந்து, கடந்த தசாப்தத்தில் நாங்கள் பார்த்த நவதாராளவாதக் கொள்கைகளாகவே அமையும். சமூகங்களைத் துருவப்படுத்தலும் அதிகாரவய அதிகாரத்தை நிலைநிறுத்தலும், நவதாராளவாதப் பொருளாதாரமொன்று உறுதியடைவதற்கான நிலைமைகளை ஏற்படுத்துமென்பதூடு, அதில், எதிர்ப்பை நசுக்குதல், மக்களைச் சுரண்டுதல், உடைமையழித்தல் ஆகியனவும் தொடரும் ஆபத்துக் காணப்படுகிறது.


(அகிலன் கதிர்காமர்)
ஞானசார தேரரை விடுவிப்பதுக்கான நாடகமே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றது; இம்ரான் எம்.பி!

ஞானசார தேரரை விடுவிப்பதுக்கான நாடகமே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றது; இம்ரான் எம்.பி!

ஞானசார தேரரை விடுவிப்பதுக்கான நாடகமே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார் அலரிமாளிகையில் இன்று மாலை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மஹிந்த ராஜபக்ச பிரதமராக பொறுப்பேற்றவுடன் திகன கலவரத்தின் சூத்திரதாரி விடுவிக்கப்பட்டார். இன்னும் சில தினங்களில் ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆகவே யார் திகன கலவரத்தின் பின்னணியில் இருந்தார்கள், யார் இனவாதிகளை பாதுகாத்து இனவாதத்தை தூண்டினார்கள் என இப்போது பொதுமக்கள் தெளிவாக புரிந்துகொள்ளமுடியும்.

ஞானசார தேரரை விடுவிப்பதுக்கான நாடகமே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றது. போராட்டம் நடாத்திய பிக்குகளுக்கு தாக்குதல் நடாத்துவது போன்று மக்களுக்கு காட்டிவிட்டு அவர்களை ஜனாதிபதி உள்ளே அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என சகல அதிகாரங்களையும் தன்னிடம் வைத்திருக்கும் ஜனாதிபதி போராட்டம் நடாத்தியவர்களுக்கு தாக்குதல் நடாத்த தான் உத்தரவிடவில்லை என கூறுவது சிறு பிள்ளை தனமாக உள்ளது. இவ்வாறுதான் நல்லாட்சியிலும் எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தையும் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் திருப்பிவிட்டு நல்லவர் போல் மக்கள் முன் நாடகமாடினார்.

ராஜபக்சகளின் வழக்குகளை விசாரணை செய்துவந்த குற்றபுலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டது வெறும் ஆரம்பமே. தொடர்ந்தும் இவர்களின் ஆட்சி நீடித்தால் வெள்ளைவேன் கலாச்சாரத்தையும் ஊடக அடக்குமுறையையும் மீண்டும் நாம் எதிர்கொள்ள நேரிடும்.

திருடர்களை பிடிப்பதாகவும் இனவாதிகளை அழிப்பதாகவும் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற ஜனாதிபதி இன்று திருடர்களுக்கும் இனவாதிகளுக்கும் துணையாக நிற்பது கவலையளிக்கிறது என தெரிவித்தார்.


(ஊடகப்பிரிவு)
பாராளுமன்ற பிரச்சினைக்கு சபாநாயகரே காரணம் - ஹிஸ்புல்லாஹ்

பாராளுமன்ற பிரச்சினைக்கு சபாநாயகரே காரணம் - ஹிஸ்புல்லாஹ்நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நிலைக்கு, சபாநாயகரின் செயற்பாடே முழுக்காரணம் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நாடளுமன்ற செயற்பாடுகளில் சபாநாயகர் சட்டவிரோதமாக செயற்படுவதுடன், பக்கச்சார்புடன் நடந்துகொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

காத்தான்குடியில் நேற்று (18) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, இந்தக் குற்றச்சாட்டை அவர் சுமத்தினார்.

தனது 30 வருடகால அரசியலில் பல சபாநாயகர்களை பல்வேறு மோசமான சூழ்நிலையிலும் சந்தித்துள்ளதாகவும் அவர்கள் யாரும் ஒரு பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை நிரகாரிப்பதற்கு சபாநாயகருக்கு அதிகாரமில்லையெனவும் ஹிஸ்புல்லாஹ் எம்.பி இதன்போது சுட்டிக்காட்டினார்.
மகிந்த அணி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்வது தவறு - சட்டத்தரணி கபூர்

மகிந்த அணி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்வது தவறு - சட்டத்தரணி கபூர்நாடாளுமன்றத்தில் தீர்க்கப்படவேண்டிய விடயங்களை பலாத்காரம் மூலம் மேற்கொள்ள முனைகின்றனரெனக் குற்றஞ்சாட்டிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், இது அரசமைப்பை அப்பட்டமாக மீறும் செயலாகவுள்ளதுடன், அரசியல் மரபுகளையும் அசிங்கப்படுத்துவதாகவும் உள்ளதாகத் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை மத்திய வீதியை, 10.5 மில்லியன் ரூபாய் செலவில் காபட் வீதியாகப் புனரமைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “அரசியல் பதவிகளையும், ஆட்சியையும் மக்களின் ஆணையின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணையை, குழிதோண்டிப் புதைத்து விட்டு, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்வது தவறு” என்றார்.

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில், ஜனநாயகம் வாழ வேண்டும் என்பதற்காக, எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமும் சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்களும் இணைந்து, பல சவால்களை எதிர்கொண்டு, போராடி வருகின்றனர்.

“தர்மம், ஜனநாயகம் போன்றவைகளை வெற்றி பெறுவதற்கு இந்தச் சுதந்திரமான போராட்டத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே, எமது மக்களின் ஆசையும், ஆவலுமாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“மக்கள் இன்று உண்மையை விளங்கிக்கொண்டுள்ளனர். அதனாலேயே, இன்று ஆட்சி அபகரிப்புக்கு எதிராக மக்கள் அனைவரும் சாரை சாரையாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்னறனர். இதற்குச் சரியானதொரு தீர்வு கிட்டும் வரையில் மக்கள் ஓயப்போவதில்லை.“இச்சதியாட்சிக்கு எதிரான போராட்டத்தில் கல்விமான்கள், புத்திஜீவிகள், பொது அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் என அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதன் மூலம் இவ்வாறானவர்களுக்கு சிறந்ததொரு பாடத்தைப் புகட்ட முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் செல்வதற்கும் அச்சமாகவுள்ளது - நசீர் எம்.பி

நாடாளுமன்றம் செல்வதற்கும் அச்சமாகவுள்ளது - நசீர் எம்.பிதற்போதுள்ள சூழலில் நாம் நாடாளுமன்றம் செல்வதற்கும் அச்சமான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனைப் பிரதேச பாதை அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நேற்று (18) மாலை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்துரையாற்றுகையில், ஆட்சியில் அமரவேண்டுமென்ற அபரீதமான ஆசையில், நாட்டில் இன்று பாரிய அரசியல் குழப்ப நிலை தோற்றிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் ஆணையைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கும் அச்சமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதுள்ள அரசியல் நகர்வுகள், சிறுபான்மை சமூகத்துக்குப் பாரிய ஆபத்தான நிலைமையைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதற்காகவே, சிறுபான்மைக் கட்சிகள் அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டி​க்காட்டினார்.

அத்துடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைப் போக்குவதாக இருந்தால், தற்போதுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உடனடியாக இராஜினாமா செய்து, ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், நாட்டின் நலன் கருதி, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு இத்தருணத்தில் ஜனாதிபதி தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டுமெனவும் பிரதமர் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்து, நாடாளுமன்றம் சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்துக்கும், அரசமைப்புக்கும் முரணான வகையில், நாடாளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டிருப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சி இன்று அமைதியாக ஜனநாயக முறையில் தீர்வைப் பெற்றுக்கொள்ளவே விரும்புவதாகத் தெரிவித்தார்
மைத்திரியின் தோல்வியும் “பொதுத்தேர்தல்” எனும் புதுப்படமும்!

மைத்திரியின் தோல்வியும் “பொதுத்தேர்தல்” எனும் புதுப்படமும்!


''எனது ஆச்சி தீவிர மஹிந்த ஆதரவாளர்.இன்று (16) பாராளுமன்றத்தில் நடந்த சம்பவங்களைப் பார்த்துவிட்டுக் கூறினார்."புத்தே,இவர்கள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்களே அதைப் பார்த்துக் கொண்டு மஹிந்த மாத்தையா சும்மாதானே இருக்கிறார்.இப்படிப் போனால் பொஹொட்டுவைக்கு இருக்கும் ஆதரவு இல்லாமல் போய்விடும்"

நேற்றைய பாராளுமன்ற சம்பவங்களைத் தொடர்ந்து டுவிற்றரில் ஒரு சிங்களவர் பதிந்த செய்தி இது.

பெரும்பாலான சிங்கள சமுகத்தினர் மெதுமெதுவாக மஹிந்த சம்பந்தமான தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாராளுமன்றம் முடிந்த கையோடு தனது முகநூலில் 'இன்று நடந்த அனைத்து விடயங்களுக்கும் காரணம் சபாநாயகரின் கட்சி பேதம் கொண்ட நடவடிக்கைதான். பொதுத் தேர்தலை நடத்தி ஸ்திரமான பாராளுமன்றைத்தை அமைப்போம்'' என்று ராஜபக்ஷ எழுதியிருந்தார்.


எதை நோக்கி இவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள் என்பது புரிகிறது.அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கும் சம்பவங்களையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் இவர்கள் ஓட்ட நினைக்கும் படம் தெரியும்.

நேற்றைய அமளி துமளிக்குள் ஒரு முக்கியமான சம்பவம் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.அதற்கு பலர் பெறுமதி கொடுக்க மறந்துவிட்டார்கள்.அதுதான் மஹிந்த அணியின் உறுப்பினரும் இன்னும் சிலரும் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு சமர்ப்பித்திருந்தார்கள்.பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வழக்கை விசாரிக்க மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அல்லாமல் 5 அல்லது 7 பேர் கொண்ட நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்குமாறு அந்த மனு கோரியிருந்தது.இது முதலாவது தொடர்பறுந்த சம்பவம்.

மஹிந்த ராஜபஷ்சவை பிரதமராக்கியதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கும் பேச்சு வரவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் மஹிந்த தரப்புக் கூட ஜனாதிபதி பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்கு முன்னர் கலைக்கமுடியாது என்று பல சந்தர்ப்பங்களில் சொல்லிக் கொண்டு வந்தார்கள். திடீரென பாராளுமன்றத்தேர்தலை நடாத்துங்கள் என்ற கோஷம் முளைத்தது.மஹிந்த அணியினரின் ஊடக பேட்டிகளை கூர்மையாக அவதானித்தால் ஒவ்வொருவரும் பொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார்கள்.பொதுத் தேர்தல் தேவை என்ற பாணியில் முகனூலில் மஹிந்தவின் அடிவருடிகள் பலர் எழுத ஆரம்பித்தார்கள்.இது தொடர்பறுந்த இரண்டாவது சம்பவம்.


இதுவரைக்கும் இரண்டு தடவை நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றியாயிற்று.முதலாவதை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.நேற்று நடை பெற்றதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியதாக செய்திகள் வருகின்றன.அதற்கு ஜனாதிபதி சொல்லும் காரணம் சரியான முறைப்படி அது நிறைவேற்றப்படவில்லை.சட்டம் தெரிந்தவர்களுக்குத் தெரியும் இது நிறைவேற்றப்பட்டது சரியான முறையில்தான் என்று. நிலையியற்கட்டளைகளின் 135ம் சரத்திற்கேற்ப பாராளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு குரல் வாக்குகள் மூலம் அவை நிறைவேற்றப்பட்டன.
தெட்டத் தெளிவாக தெரிந்த பின்னரும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளாமல் இழுத்தடிக்கிறார்.இது தொடர்பறுந்த மூன்றாவது சம்பவம்.


பாராளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு நடப்பதைத் தடுப்பதற்கு மஹிந்த அணி பகிரதப் பிரயத்தனம் எடுக்கிறார்கள்.14ம் திகதி தடுத்தார்கள்.15ம் திகதி மஹிந்தவின் பேச்சுக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற ல்க்ஷ்மன் கிரியெல்ல எழுந்த போது குப்பைக் கூடையால் சபாயாநகருக்கு எறிந்து தடுத்தார்கள்.நேற்று சபாயகரைக் கதிரைக்கே வராமல் தடுத்தார்கள்.அப்படிக் குழுமியிருப்பவர்களின் காதுகளுக்குள் நாமல் ராஜபக்ஷ போய் ஏதோ குசுகுசுத்துவிட்டு வருகிறார்.இது நான்காவது சம்பவம்.


இவைகள் எல்லாவற்றையும் ஒரு நேர் கோட்டின் இழுத்துவைத்துப் பார்த்தால் மஹிந்த தரப்பின் திட்டம் தெரிகிறது.


26ம் திகதி நடாத்தப்பட்ட முழு நாடகமும் ஒரு நம்பிக்கையின் பெயரில்தான்.'எம்மால் பெரும்பான்மை காட்ட முடியும்'. ஆகவே மஹிந்தவை பிரதமாராக்குவது. பெரும்பான்மை காட்டுவது.ஆனால் அந்தத் திட்டம் அதோ கதியாகிவிட்டது.


இந்த அவமானத்திலிருந்து வெட்கத்திலிருந்தும் சுதாரித்துக் கொள்ள அவர்கள் போட்ட ''PLAN B'' பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துவது.அதைத் தவிர இந்த அவமானத்திற்கு தீர்வில்லை.ஆனால் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவு அவர்களின் திட்டம் மீது இடியைப் போட்டுவிட்டது.


இப்பொழுது அவர்களது திட்டம் நீதிமன்றத் தீர்ப்பு டிசம்பர் 7ம் திகதியளவில் வரும் வரைக்கும் மஹிந்தவின் பிரதமர் பதவியோடு பாராளுமன்றைத்தை இழுத்துக் கொண்டு செல்வது. அதற்கு இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன.


அதுவரைக்கும்,

01.பாராளுமன்ற கூட்டத் தொடரை தொந்தரவு செய்வது.
02.அதையும் தாண்டி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தால் ஜனாதிபதியை வைத்து நிராகரிக்கச் செய்வது.

03.அடாவடித் தனங்களுக்கு சபாநாயகரைக் காரணம் காட்டுவது.

04.எப்படியாவது முறையான நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு அவர்களை இணங்க வைத்துவிட்டால் நாட்கள் ஓடிவிடும்.தீர்ப்பு நாளும் வந்துவிடும்.

05.அதையும் தாண்டி அவர்கள் நடாத்திக் காட்டினால் ரணிலை நியமிக்க முடியாது என்று இழுத்தடிப்பது.

06.அதே நேரம் தேர்தல் தேவை என்று மக்களை விட்டு கோஷம் செய்ய வைப்பது.பாரிய பேரணிகளை அமைப்பது.

07.பாராளுமன்றத்தில் கடுமையான தாக்குதலை மேற்கொள்வது.


08.நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது.அதிகரித்தால் மஹிந்தவின் ஆதரவாளர்கள் சிலர் அதில் இருக்கலாம்.

09.தொடர்ந்து பாராளுமன்றைத்தை வைத்திருந்தால் அடிதடி வரும்,மக்களுக்கு தேர்தல் தேவை என்று வாதங்களை வழக்கில் முன்வைப்பது.

10.நீதிபதிகளை மிரட்டியாவது பாராளுமன்றத்தைக் கலைத்துவிடும் தீர்ப்பைப் பெற்றுவிடுவது.
இந்தத் திட்டத்தை நோக்கித்தான் இது சென்று கொண்டிருக்கிறது.

ஆனால் அவர்களது திட்டம் பிழைத்துவிடும்.எப்படித் தெரியுமா.முதல் பந்தியில் ஆச்சி சொன்ன காரணம்தான்.


''புத்தே,இவர்கள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்களே அதைப் பார்த்துக் கொண்டு மஹிந்த மாத்தையா சும்மாதானே இருக்கிறார்.இப்படிப் போனால் பொஹொட்டுவைக்கும் இருக்கும் ஆதரவு இல்லாமல் போய்விடும்" 

(Raazi Muhammedu Jabir)
அகிலாவுக்கு வந்த மகிந்த அணியினரின் "பெரும்பான்மை அலைபேசி "

அகிலாவுக்கு வந்த மகிந்த அணியினரின் "பெரும்பான்மை அலைபேசி "நாடாளுமன்றத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, ஆளுங்கட்சியின் பலர் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரிவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று அதிகாலை தனக்கொரு அலைபேசி அழைப்பு வந்ததாகவும், எது வேண்டுமானாலும் செய்கின்றோம். வாக்கெடுப்பின் போது தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு மறுபுறம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அழைப்பு விடுத்ததாக அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் இன்று தமது அலைபேசிகளை துண்டித்து, இருக்குமிடங்களை வெளியே கூறாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி​யுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட இளஞ்செழியன் கொலைச்சதி சூத்திரதாரர்கள் !

பிணையில் விடுவிக்கப்பட்ட இளஞ்செழியன் கொலைச்சதி சூத்திரதாரர்கள் !யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது அவரது மெய்பாதுகாவலர் கொல்லப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரினால் குறித்த சந்தேக நபர்கள் 3 பேருக்கும் கடும் நிபந்தனைகளுடனான பிணை நேற்று (19) வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 3 பேரும் 2017 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி தொடக்கம், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் 3 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்க பிணையிலும், 5 இலட்சம் ரூபாய் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 3 பேரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ். நீதிவான் நீதிமன்ற அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் 3 பேரும் வெளிநாட்டுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள மீலாதுன் நபி செய்தி!

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள மீலாதுன் நபி செய்தி!

அராஜகத்துக்குப் பதிலாக உண்மையான ஜனநாயகத்தின் மகிமையை உலகத்துக்கு எடுத்துக்காட்டியவராக இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வரலாற்றில் இடம்பெறுவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள மீலாதுன் நபி செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

உள்நாட்டிலும், வெளிநாடுகள் பலவற்றிலும் அடாவடித்தனங்கள் அதிகரித்து, சர்வாதிகாரப் போக்கு தலைவிரித்தாடுகின்ற இக்கால கட்டத்தில், பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறியாமை மிகைத்திருந்தபோது அராபிய தீபகற்பத்தில் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் நல்லாட்சியை நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தோற்றுவித்தைப் பற்றி நாங்கள் சிந்திப்பது சாலச் சிறந்ததாகும்.

சன்மார்க்க விழுமியங்களுக்கு மதிப்பளித்து, அல்-குர்ஆனின் போதனைகள் மற்றும் நபி பெருமானாரின் வழிமுறைகள் என்பவற்றை வாழ்க்கையில் பின்பற்றுவதிலேயே எங்களது ஈருலக விமோசனமும் தங்கியிருக்கிறது.


(ஊடகப் பிரிவு)
அவுஸ்திரேலிய அரசின் எச்சரிக்கை !

அவுஸ்திரேலிய அரசின் எச்சரிக்கை !


சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஆள்கடத்தல்காரர்களும் பரப்புகின்ற பொய்யான செய்திகளை நம்பி அவுஸ்திரேலியாவை நோக்கிய சட்டவிரோத கடற்பயணங்களை இலங்கையர்கள் மேற்கொள்ளவேண்டாம் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்

அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செசன் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய எல்லைகள் சட்டவிரோத குடியேற்றவாசிகளிற்கு மூடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

ஆள்கடத்தல்காரர்களிடமிருந்து அவுஸ்திரேலிய எல்லைகளை பாதுகாத்த- கடலில் மக்கள் நீரில் மூழ்கி மரணிப்பதை தடுத்த கடுமையான எல்லை பாதுகாப்பு கொள்கைகள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் எந்த சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளும் இடம்பெறுவதை தடுப்பதற்காக- சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகுகளை கண்டுபிடிப்பதற்கான வலுவான திறனை அவுஸ்திரேலிய கொண்டுள்ளது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக நுழைவதற்கு நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் கைதுசெய்யப்படுவீர்கள் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு வருட காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த அனைத்து இலங்கை படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன அதிலிருந்தவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டுள்ளனர் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் அனுமதிக்காக காத்திருக்கும் பொலிஸ் -MPகளுக்கு ஆப்பூ

சபாநாயகரின் அனுமதிக்காக காத்திருக்கும் பொலிஸ் -MPகளுக்கு ஆப்பூ


இலங்கை நாடாளுமன்றில் ஏற்பட்ட அசௌகரியமான மோதல்நிலை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பொலிஸ் தலைமையகம் சபாநாயகரின் அனுமதியினைக் கோரி நிற்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் ஏற்பட்டமோதல் நிலமையின் கீழ் பல நாடாளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதோடு, பொலிஸ் அதிகாரிகள் சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தாக்குதல்களளுக்கு காரணமாக காயத்திற்குள்ளாகினர்.

நாடாளுமன்ற சபையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடாத்தியமைக்கு சபாநாகரின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனபொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தற்போதும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்அதிகாரிகள் சிலரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யபட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பொலிஸ்அதிகாரியொருவர் கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சபையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் நேரடியாக விசாரணைகளை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள குறித்தபொலிஸ் அதிகாரி, சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு சபாநாயகரின் அனுமதி வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான தீர்வே எமது இலக்கு - TNA

வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான தீர்வே எமது இலக்கு - TNA

"புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகவும் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறையிலான தீர்வை காணவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முனைவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்."

தமிழ் தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தியை மாத்திரம் நோக்காகக்கொண்டு செயற்பட்டிருந்தால் இன்று மத்திய அரசாங்த்தில் எத்தனையோ அமைச்சுப்பொறுப்புக்களை பெற்றிருந்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே இதனை தெரிவித்துள்ளார், அவர் மேலும் குறி்ப்பிட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்காக உள் நாட்டிலும், சர்வதேசத்தில் இருந்து செயற்படும் சில அமைப்புக்களும் முனைப்புடன் செயற்படுவதாக சாடினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகவரியை பெற்ற சிலர் தங்களது சுய நலனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது தமிழ் மக்கள் இருப்பதாக வலியுறுத்தினார்.

நிரந்தரமான வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறை ஆட்சி மூலம் தமது உரிமையை வென்றெடுக்க வேண்டும் அப்போதுதான் நிரந்தரமான நிறைபேறான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்
நிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ

நிதியில் கை வைத்தது UNP: ஜனாதிபதிக்கே ஆப்பூ

நாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளதனால், இந்த அரசாங்கத்தின் அனைத்து நிதிச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நெருக்கடி நிலைமையின் போது ஜனாதிபதிக்கு மூன்று மாத காலத்துக்கு அரசாங்கத்துக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்ள அதிகாரம் உள்ளது.

ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும், சாதாரண நிலைமைகளின் போது பாராளுமன்றத்தில் அனுமதி பெற்றே நிதியைப் பயன்படுத்த முடியும். ஜனாதிபதியின் நிதியையும் பாராளுமன்றத்தினூடாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன், அரசாங்க அமைச்சுகளின் எந்த ஒரு நிதி ஒதுக்கீடு மற்றும் செலவு நடவடிக்கைகள் என்பன பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, பாராளுமன்றம் ஏற்றுகொண்ட பின்னரே செல்லுபடியாகும்.

அதேபோல், கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்ட, நிதி ஒதுக்கீடுகளை கண்காணிக்கும், இடை நிறுத்தும் அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது.

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கூட்டுத் தரப்பிடமே பெரும்பான்மை பலம் உள்ளது.அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இந்த சட்ட முரணான அரசாங்கத்தின்படி செயற்பட வேண்டாம் என அறிவித்துள்ளோம்.

எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றும் முகமாக, பிரதமர் அலுவலக செயலாளரின் நிதி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பிரேரணையை நேற்று சபாநாயகரிடம் கையளித்துள்ளோம்.இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதை தொடர்ந்து இந்த அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எதிராகவும் தாம் இத்தகைய பிரேரணைகளை கொண்டு வருவோம். இதன் மூலம் இந்த நிழல் ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை தாம் முற்றாக முடக்குவோம் எனவும் ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்களில் கூறியுள்ளனர். 
அக்கரைப்பற்று, வட்டமடு விவசாயிகள் 17 பேர் கைது

அக்கரைப்பற்று, வட்டமடு விவசாயிகள் 17 பேர் கைது

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு தோணிக்கல் பிரதேசத்தில், மகாபோக நெற்செய்கைக்காக வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனரென அறியக்கிடைத்துள்ளது, இந்த கைது நடவடிக்கையினை மனித உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கும் சமாதான நீதவான்கள் பேரவைகண்டிப்பதாக அதன் தலைவர் பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்,

குறித்த அமைப்பின் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

வட்டமடு உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தில் 2500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் பல்வேறுபட்ட திணைக்களம் மற்றும் ஏனைய அமைப்பால் சுவீகரிக்கப்பட்டு அங்கு செற்பயிர்செய்கை செய்யப்படாமல் இருப்பதை எமது அமைப்பு ஏலவே பலமுறை அரசுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் தெரிவித்துள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை மிகவும் வருத்தமளிக்கிறது.

மனிதன் உயிர்வாழ்வது மாத்திரமின்றி, அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ தேவையான அனைத்தும் மனித உரிமைகள் ஆகும், அவற்றில் அவனது தொழில் வாழ்விடம், நிலம் என்பன முக்கிய பங்கு வகிக்கிறது, பண்டைய காலம் தொட்டு வட்டமடு உள்ளிட்ட காணிகளில் முன்னோர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர், அப்போது இல்லாத பிரச்சினைகள் இன்று எப்படி வருகிறது? அது மாத்திரமின்றி நெல்லுக்கும் அரிசிக்கும் தட்டுப்பாடு இருக்கும் இந்த காலப்பகுதியில் விவசாயத்தை தடைசெய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

கைது செய்த விவசாயிகளை விடுதலை செய்வதோடு குறித்த பகுதிகளில் விவசாயம் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்யவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு மகிந்த,ரணிலிடம் - புத்தசாசன குழு வேண்டுகோள்

இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு மகிந்த,ரணிலிடம் - புத்தசாசன குழு வேண்டுகோள்

சமாதானமான முறையில் தேர்தல் ஒன்றை நடாத்துவதை நோக்காக் கொண்டு அறிவுபூர்வமாகவும், புரிந்துணர்வுடனும் செயலாற்றக் கூடிய ஒரு இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமும் புத்தசாசன பணிக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்பொழுது ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி ஆகிய இரு தரப்பினரும் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என்ற உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த தேர்தலை நோக்கி செல்லும் வரையில் பொது மக்களின் உணர்வுகளை மதித்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை வென்ற இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதுதான் தற்போதைய சூழ்நிலையில் அவசியமான ஒன்று எனவும் அப்பணிக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஒன்றுக்கு செல்வதே மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும். அதுவல்லாது, தொடர்ந்தும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதனால் மீண்டும் மீண்டும் நெருக்கடி நிலைமைதான் உருவாகின்றது.

இதனால், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பாராளுமன்ற அமர்வுகளை நடாத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சியம் பீடத்தின் மல்வத்து பிரிவு, அஸ்கிரி பிரிவு , அமரபுர பீடம் மற்றும் ராமங்ஞ்ஞா பீடம் ஆகிய பீடங்களின் மகாநாயக்கர்களின் நிறைவேற்றுக் குழு மற்றும் திவியாகஹ யசஸ்ஸி தேரர் ஆகியோரை உள்ளடக்கிய புத்தசாசன பணிக்குழுவே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

Srilanka News today | CeylonMuslim | CoupLK
சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்படலாமா?

சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்படலாமா?


சரத்து 37(2) இன் கீழ் சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஐ தே க இன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சரத்து கூறுவதென்ன?

சரத்து 37(1) இன் பிரகாரம், சுகயீனம், வெளிநாடு செல்லல் அல்லது வேறு ஏதும் காரணமாக ( or any other cause - இந்த சொற்றொடரை கவனமாகப் பார்க்கவும் - இந்த தலைப்பின் முழுக்கேள்வியும் பிரதானமாக இந்த சொற்றொடரிலேயே தங்கியிருக்கின்றது) தனது கடமையைச் செய்யமுடியாதபோது, பிரதமரை அக்கடமையைச் செய்வதற்கும் இன்னுமொரு அமைச்சரை பதில் பிரதமராகவும் நியமிக்கலாம்.

பிரதம அமைச்சர் பதவி வெற்றிடமாக உள்ளபோது, அல்லது பிரதமர் செயற்படமுடியாதபோது சபாநாயகரை தனது கடமைகளைச் செய்ய நியமிக்கலாம்.

சரத்து 37(2)- மேலே சரத்து 37(1) இன் பிரகாரம் ஜனாதிபதி தற்காலிகமாக தன் கடமைகளைச் செய்யமுடியாதென்றும் அதேநேரம் பிரதமரையோ அல்லது சபாநாயகரையோ தன் கடமையைக் கவனிக்க “நியமிக்க முடியாத” ( இந்த சொற்றொடரையும் சற்று ஊன்றி கவனிக்கவும்) நிலையில் ஜனாதிபதி இருக்கின்றார்; என்றும் சபாநாயகருடன் கலந்தாலோசித்தபின் பிரதம நீதியரசர் அபிப்பிராயப்படுவாரானால் அவரது அந்த அபிப்பிராயத்தை சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும்.

அதன்பின் அந்த ( தற்காலிக ) “ காலப்பகுதிக்குள்” பிரதமர் ஜனாதிபதியின் கடமைகளைச் செய்யவேண்டும். இன்னுமொரு அமைச்சரை பதில் பிரதமராக நியமிக்க வேண்டும்.

பிரதம மந்திரி பதவி அப்பொழுது வெற்றிடமாக இருந்தாலோ அல்லது பிரதமர் செயற்பட முடியாமல் இருந்தாலோ, சபாநாயகர் ஜனாதிபதியின் கடமைகளை அந்தக் காலப்பகுதியில் ஆற்றவேண்டும்.

இங்கு கவனிக்கப்பட வேண்டியவை:

37(1) இன் பிரகாரம் ஜனாதிபதி தனது கடமைகளைச் செய்யமுடியாமலும் ஒரு பதில் ஜனாதிபதியை நியமிக்க முடியாமலும் இருக்கின்றார்; என சபாநாயகருடன் பிரதம நீதியரசர் கலந்தாலோசித்ததன்பின் பிரதம நீதியரசர் அபிப்பிராயப்படல் என்பது முதலாவது விடயம். அவ்வாறு அபிப்பிராயப்பட்டால்தான் பதில் நியமனம் என்ற ஒன்று இடம்பெறும்.

இங்கு ஜனாதிபதி தன் கடமைகளைச் செய்யமுடியாமல் இருப்பதற்கான காரணங்கள் 37(1) இன் பிரகாரம் ‘ சுகயீனம், வெளிநாடு செல்லல் அல்லது வேறு ஏதாவதொரு காரணம்’ ஆகும். சுகயீனம், வெளிநாடு செல்லல், என்பது தற்போது காரணமல்ல.

அவ்வாறாயின் ‘ வேறு ஏதாவது காரணங்கள்’ என்பதற்குள் இன்றைய நாட்டு நிலைமையை உள்ளடக்க முடியுமா? அந்தக்காரணங்கள் தன் கடைமையைச் செய்யமுடியாமலும் பதில் ஜனாதிபதியை நியமிக்க முடியாமலும் தடுக்கின்றதா? என்ற இரண்டு கேள்விகள் இங்கு இருக்கின்றன.

அதாவது, வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும். அதன்காரணமாக அவர் தன்பணியைச் செய்ய “முடியாமல்” இருக்கவேண்டும். “ செய்யாமல் இருப்பதல்ல”. அல்லது “செய்யாமல் இருப்பது” என்பது “ செய்யமுடியாமல் இருப்பது” என்றுதான் இந்த இடத்தில் அர்த்தப்படுத்த வேண்டும்; என்று வியாக்கியானம் கொடுக்கவேண்டும்.
நாட்டின் இன்றைய சூழ்நிலை

நாட்டின் இன்றைய சூழ்நிலையை மேற்படி சொற்பதங்களுக்குள் கொண்டுவரமுடியுமா? என்பது தொடர்பாக பார்ப்போம்.

கடந்த 26ம் திகதி இருந்த பிரதமர் நீக்கப்பட்டு புதிய பிரதமரும் அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிக்கின்ற உரிமையும் அதிகாரமும் பாராளுமன்றத்திற்கு இருந்தது. பாராளுமன்றத்தை ஒத்திவைத்து அந்த அதிகாரத்தை பாராளுமன்றம் செயற்படுத்துவதை ஜனாதிபதி தடுத்தார்.

பல போராட்டங்களின் பின் இரண்டுநாட்கள் முன்னதாக பாராளுமன்றைக் கூட்ட ஜனாதிபதி திகதி குறித்தார். அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்தை கலைத்தார். நீதிமன்றம் அக்கலைப்பிற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. 14ம் திகதி மீண்டும் கூடிய பாராளுமன்றம் புதிய அரசின்மீது தமக்கு நம்பிக்கை இருக்கின்றதா? இல்லையா? என்பதை வெளிப்படுத்த முன்வந்தது.

நிலையியற்கட்டளையை ஏன் இடைநிறுத்த வேண்டும்?

நிலையியற்கட்டளையை ஏன் இடைநிறுத்தவேண்டும்? என்று கேள்வி கேட்பவர்களிடம் எழுப்பப்படவேண்டிய கேள்வி, நிலையியல் கட்டளையைத்தான் பின்பற்றவேண்டும்? என்று எந்த சட்டத்தில் இருக்கின்றது; என்பதாகும்.

பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குவது அரசியலைப்பு. நிலையியல் கட்டளையைப் பின்பற்ற அதிகாரம் வழங்கியது அதன் சரத்து 74. அது பின்வருமாறு கூறுகின்றது.

“Subject to the provisions of the Constitution, Parliament may by resolution or Standing Order provide for
(ii) the regulation of its business.....”

இங்கு resolution அல்லது Standing Order என்றுதான் கூறப்பட்டிருக்கின்றது. அதிலும் முதலாவது பாவிக்கப்பட்டிருக்கும் சொல் ‘ resolution ஆகும். அதேநேரம் நிலையியற்கட்டளையிலும் அதனை இடைநிறுத்துவற்கு இடமுண்டு. ( நிலையியற்கட்டளை இல 135)

எனவே, நிலையியிற்கட்டளையை இடைநிறுத்தியை சட்டரீதியாக யாரும் கேள்வி எழுப்பமுடியாது. பாராளுமன்றத்தின் இந்த சட்டரீதியான முடிவை கேள்வி எழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு என்ன உரிமை அல்லது அதிகாரம் இருக்கின்றது.

இந்தக்கட்சிகள் ஜனாதிபதியைச் சந்தித்தபோது அவர் இது குறித்து குறிப்பிடும்போது இவர்கள் கேட்டிருக்கவேண்டும், எந்தச் சட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் முடிவைக் கேள்விக்குட்படுத்துகின்றீர்கள்? உங்களின் இந்தக் கேள்வி பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறுகின்றது; என்று ஏன் கூறவில்லை.

அல்லது ஆகக்குறைந்தது எந்தச்சட்டத்தில் நிலையியல்கட்டளை இடைநிறுத்தப்பட்டது; பிழை? சட்டம் பிழை என்று சொல்லாததை பிழை என்று சொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் அளித்த சட்டம் எது? என்று ஜனாதிபதியை மாறிக்கேட்டிருந்தால் ஜனாதிபதிக்கு விளங்கியிருக்கும்; நாம் எங்கே நிற்கிறோம் என்று. ஆனால் போனவர்களின் குறிக்கோளெல்லாம் எப்படியாவது ஜனாதிபதியை சமாளித்து காரியம் வெல்வது.

இங்கே முதலாவது வெல்ல வேண்டியது காரியமல்ல. அரசியலமைப்பு. அதிகாரம் மக்களுடையது என்று சொல்லியிருப்பது அது. அதை மாற்றி அதிகாரம் ஜனாதிபதியினுடையது என்று நிறுவ முயற்சிக்கின்றார், ஜனாதிபதி.

நிலையியற்கட்டளையை இடைநிறுத்துவதற்கு சட்டரீதியாக எந்தக்காரணமும் தேவையில்லை. அது பாராளுமன்றத்தின் விருப்பத்தைப் பொறுத்தது. இருந்தாலும் நடைமுறையில் அவ்வாறு இடைநிறுத்துவதற்கு ஏதும் வலுவான காரணம் இருந்ததா? எனப்பார்ப்போம்.

நீதிமன்றத் தடையுத்தரவைத் தொடர்ந்து 14ம் திகதி பாராளுமன்றம் கூட இருந்தபோது 13ம் திகதி இரவு 12 மணிக்கு மீண்டும் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க ஒரு முஸ்தீபு இருந்ததாகவும் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் ஒரு நாளாவது கூடாமல் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதில் உள்ள சட்டப்பிரச்சினை சுட்டிக்காட்டப்பட்டபொழுது மீண்டும் 14ம் திகதி பாராளுமன்றம் கூடியதன்பின் ஒத்திவைக்க ஒரு முனைவு இருந்ததாகவும் அப்போது ஒரு செய்தி அடிபட்டதை 14ம் திகதி ஒரு பதிவில் சுட்டிக்காட்டி இருந்தேன்.

அதேநேரம் ஜனாதிபதியின் முன்னைய செயற்பாடுகளை நோக்கும்போது அவ்வாறான ஒரு சாத்தியப்பாடு நிராகரிப்பதற்கும் இல்லை. இந்நிலையில் நிலையியக்கட்டளையைப் பின்பற்றி ஐந்து நாள் அவகாசம் கொடுத்தால் ஜனாதிபதி மீண்டும் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தால் பாராளுமன்றம் புதிய அரசாங்கம் தொடர்பாக தீர்மானம் எடுக்கின்ற உரிமை மீண்டும் முடக்கப்படும். இதை அனுமதிக்க முடியுமா? இந்நிலையில் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை, உரிமையை, சுயாதிபத்தியத்தைப் பாதுகாக்க வேண்டியது சபாநாயகரினதும் பாராளுமன்றத்தினதும் கடமையில்லையா? இந்நிலையில் நிலையியல் கட்டளைப்படி ஐந்துநாள் அவகாசம் வழங்கமுடியுமா?

இங்கு சிறுகுழந்தைக்கும் எழுகின்ற கேள்வி உங்களிடம் பெரும்பான்மை இருந்தால் உங்களுக்கு ஐந்து நாள் எதற்கு? அன்றே பெரும்பான்மை நிரூபித்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கலாமே! பெயர்கூறி வாக்கெடுப்பு

பெயர்கூறி வாக்கெடுப்பு நடாத்தினால் ஏற்றுக்கொள்வேன்; என்கின்றார் ஜனாதிபதி. 14ம் திகதி பெயர்கூறி வாக்கெடுப்பு நடாத்த சபாநாயகர் அழைப்பு விடுக்கவில்லையா? அதைக்குழப்பியது யார்? உங்கள் கட்சிக்காரர்கள் இல்லையா? உங்கள் கட்சிக்காரர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை ஏன் சபாநாயகரிடம் கேட்கின்றீர்கள்?

உங்களிடம் பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி செய்யவேண்டும். அதற்காக பாராளுமன்றத்தை முடக்கப்பார்த்தீர்கள். கலைக்கப்பாத்தீர்கள். உங்கள் கட்சிக்காரர்கள் குழப்ப நீங்கள் சபாநாயகருக்கும் பாராளுமன்றத்திற்கும் எதிராக தீர்ப்பு வழங்கிக்குக்கொண்டிருக்கின்றீர்கள்.

விளைவு நாட்டில் இன்று அரசாங்கம் இல்லை. அமைச்சுகளுக்கு செயலாளர்களில்லை. செயலாளர்களின் அனுமதி இல்லாமல் அமைச்சு நிதிகள் செலவளிக்கப்பட முடியாது. இப்பொழுது அனைத்தும் சட்டவிரோதமாக நடைபெறுகின்றது.

வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. உல்லாசப்பயணிகளின் வரவு குறைந்துகொண்டு வருகின்றது. பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி நகர்கிறது.

இதனிடையில் வருட இறுதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த ஆண்டு சம்பளமும் கொடுக்கமுடியாது. எதுவும் செய்யமுடியாது. பாராளுமன்றம் கலைந்தால் மூன்று மாதங்களுக்கு ஜனாதிபதியின் அனுமதியுடன் நிதி செலவழிக்கலாம். இப்பொழுது அது முடியாது. எனவே நாடு மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தில் இருக்கின்றது.

இந்நிலையில் 37(1) இல் சொல்லப்பட்ட ‘வேறு ஏதாவது ஒரு காரணம்’ என்ற அந்தப் பதத்திற்குள் இன்றைய சூழ்நிலை அடங்குமா? என்பதுதான் முதலாவது இங்கு தீர்மானிக்கப்படவேண்டிய கேள்வியாகும்.

இதற்குரிய பதில் ‘ ஆம்’ என்றால் அடுத்த கேள்வி, ஜனாதிபதி தன் கடைமையைச் ‘ செய்யாமல் இருக்கின்றாரா? அல்லது செய்யமுடியாமல் இருக்கின்றாரா? ‘ என்பதாகும். தன்கடமையைச் செய்யமுடியாமல் ஏதோ ஒரு காரணம் தடுக்கின்றதா? அந்தக்காரணத்தினால் அவர் செய்யமுடியாமல் இருக்கின்றாரா?

சுருங்கக்கூறின் ‘ செய்யாமல் இருப்பதை, செய்யமுடியாமல் இருக்கின்றார்’ என்று இந்த சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுத்தலாமா? இதற்குமுரிய விடை ‘ஆம்’ என்றால் சபாநாயகர் ஜனாதிபதியின் கடமையைப் பொறுப்பேற்கலாம். இல்லையெனினில் முடியாது.

இது சபாநாயகருடன் கலந்தாலோசித்து பிரதம நீதியரசர் எடுக்கின்ற அபிப்பிராயத்தில் தங்கியிருக்கின்றது.

சபாநாயகர் ஜனாதிபதியின் கடமையைப் பொறுப்பேற்றால் பிரதமரை நியமிக்க முடியுமா ?
—————————————————————
சரத்து 37(3) ஜனாதிபதிக்கு பொருந்துகின்ற சரத்துக்கள் இவ்வாறு ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்றவருக்கு பொருந்தக்கூடிய அளவு பொருந்தும். சரத்து 32(2)ஐத் தவிர, என்று கூறுகின்றது. 32(2) என்பதன் சுருக்கம் அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யத்தேவையில்லை, என்பதாகும்.

சரத்து 37(1) மற்றும் (2) இன்படி, பிரதமர் ஜனாதிபதியின் பொறுப்புக்களைப் பாரமெடுக்கும்போது அமைச்சரவருவரைப் பதில் பிரதமராக நியமிக்க வேண்டும். பிரதமர் இல்லாதபோது சபாநாயகர் பாரமெடுக்கவேண்டும்; என்றுதான் கூறப்பட்டிருக்கின்றதே தவிர யாரைப் பிரதமராக நியமிக்கவேண்டும்; எனக்கூறப்படவில்லை.

சபாநாயகர் பாரமெடுப்பதை ஒரு proviso வினூடாகவே கூறப்பட்டிருப்பதால் மேல் கூறப்பட்டதே இங்கும் பொருந்துமா? மாறாக பிரதமர் இல்லையெனில் அமைச்சரவை இல்லை. அமைச்சுச் செயலாளர்கள் இல்லை. எனவே, புதிய பிரதமரை 42(4) இன் பிரகாரம் நியமிக்க முடியுமா? அவ்வாறு நியமிக்க முடிந்தாலும் அவர் பதில் பிரதமரா, முழுமையான பிரதமரா?

44(2) இரண்டு பதில் பிரதமர் நியமிப்பதற்கான சரத்து அல்ல. எனவே, முழுமையான பிரதமரை நியமிக்க முடியுமா?

சரத்து 37 இன் கீழ் அமைச்சர்கள் இல்லாத சூழ்நிலையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பதில் பிரதமராக நியமிக்க முடியும்; என்ற வியாக்கினத்திற்கு வரமுடியுமா?

பிரதமர் மட்டும் இருந்து அரசாங்கமாக ஆகிவிடாது. அமைச்சரவை வேண்டும். அமைச்சரவை நியமிப்பதைப்பற்றி சரத்து 37 எதுவும் கூறவில்லை. எனவே, சரத்து 43 ஐப் பிரயோகிக்க முடியுமா? அதாவது சாதாரணமாக அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் சரத்து. சரத்து 43 ஐப் பிரயோகிக்க முடியுமானால் ஏன் சரத்து 44(2) ஐப் பிரயோகித்து அமைச்சர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் முழுமையான பிரதமரை நியமிக்க முடியாது.

37(1)&(2) ஆகியவற்றில் பிரதமர் பதில் ஜனாதிபதியாகும்போது ஒரு அமைச்சரை பதில் பிரதமராக நியமிப்பதற்குக் காரணம் பதில் ஜனாதிபதி பிரதமராகவும் இருக்கின்றார். மறுவார்த்தையில் கூறுவதாயின் பிரதமராக இருப்பதனால்தான் அவர் பதில் ஜனாதிபதியாக இருக்கின்றார்.

பதில் ஜனாதிபதியாக வருகின்றவர் தனது பிரதமர் பதவியையோ, சபாநாயகர் பதவியையோ ராஜினாமா செய்யத்தேவையில்லை. பிரதமரின் கடமையைச் செய்வதற்கே பதில் பிரதமர் நியமிக்கப்படுகின்றார்.

சபாநாயகர் பாரமெடுக்கும்போது பிரதமரே இல்லை. எனவே 44(2) இன் கீழ் புதிய பிரதமரை நியமிப்பதற்கு தடையில்லை; என்று ஏன் கொள்ளமுடியாது?

இவ்வாறு பல கேள்விகளுக்கு பதில் காணவேண்டியிருக்கும். இருந்தாலும் சபாநாயகர் பாரமெடுத்துவிட்டால் புதிய பிரதமர், அமைச்சரவை நியமிப்பதில் பிரச்சினை இல்லை, என்பதே பலமான வியாக்கியானமாக இருக்கும். சபாநாயகர் பாரமெடுக்கக்கூடிய 37 இல் குறிப்பிடப்படுகின்ற சூழ்நிலைதான் இன்றைய சூழ்நிலை எனக்கொள்ளலாமா?

என்ன நடக்கப்போகிறது?


(வை எல் எஸ் ஹமீட்)
வஷீம் தாஜூடீன் படுகொலை ; விசாரணை செய்த புலனாய்வு உயர் அதிகாரிக்கு இடமாற்ற முயற்சி!

வஷீம் தாஜூடீன் படுகொலை ; விசாரணை செய்த புலனாய்வு உயர் அதிகாரிக்கு இடமாற்ற முயற்சி!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த இந்த இடமாற்றமானது நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கே இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந் நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிஷாந்த சில்வா கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம், லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம், வஷீம் தாஜூடீன் படுகொலை, ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் விவகாரம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Nov 19, 2018

வைரமாய் மாறும் யானை !!!

வைரமாய் மாறும் யானை !!!


நடைமுறையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலையை அடுத்து ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் சின்னத்தில் மாற்றத்தை கொண்டு வர இணங்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்து வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்துக்கு பதிலாக வைரம் என்ற சின்னத்தில் விரிவான முன்னணியாக போட்டியிட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஆவணங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த சின்னத்தை ஏற்றுக்கொள்வதில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான முன்னணி மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டன. எனும் இறுதியில் வைரம் என்ற சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
பாராளுமன்றத்திற்கு வருவதற்கும் ஹெலிகொப்டரை பயன்படுத்துகின்றார் மஹிந்த ;பொன்சேகா குற்றச்சாட்டு !

பாராளுமன்றத்திற்கு வருவதற்கும் ஹெலிகொப்டரை பயன்படுத்துகின்றார் மஹிந்த ;பொன்சேகா குற்றச்சாட்டு !


மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, விஜேராம இல்லத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதற்கு ஹெலிகொப்டரை பயன்படு பயன்படுத்துகின்றார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் சட்டவிரோதமான பிரதமர் நியமனத்தினால் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு கிடைக்க வேண்டிய அந்நிய செலாவணி 2 பில்லியன் டொலர் மற்றும் அமெரிக்காவிலிருந்து கிடைக்க வேண்டிய 700 பில்லியன் அமெரிக்க டொலர் என்பவை நிறுத்தப்பட்டுள்ளது.

இது எமது நாட்டு பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தும். இவர்களது கையில் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றால் நாடு இவ்வாறு தான் செல்லும்.

எனவே இவ்வாறு காலத்தை வீணடிக்காது மீதமிருக்கும் ஒன்றரை வருடங்கள் ஆட்சியை தொடர இடமளித்து தேர்தலுக்கு செல்வதே சிறந்ததாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் பிரதி சபாநாயகரினால் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

(எம்.மனோசித்ரா)
இன்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்ப சிலர் முயற்சி !

இன்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்ப சிலர் முயற்சி !


பாராளுமன்றம் கூடும்போது சபை நடவடிக்கைகளைக் குழப்புவதற்கான திட்டங்கள் முன்னெடுக்க சிலர் தயார் நிலையில் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றது. இதனாலேயே பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டதுடன் பொதுமக்கள் கலரியும் மூடப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமான போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு கடந்த சில தினங்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மிகுந்த அதிருப்தி அடைவதாகவும், இனிமேலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதனை உறுதி செய்வது அனைத்து தரப்பினரதும் கடமையாகும் எனவும் வலியுறுத்தினார்.
(நா.தனுஜா)
இலங்கை ஜனநாயக நாடா? என்பதில் சஜித் சந்தேகம் வெளியீடு!

இலங்கை ஜனநாயக நாடா? என்பதில் சஜித் சந்தேகம் வெளியீடு!

இலங்கை ஜனநாயக நாடா என்பதில் சந்தேக ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

இன்று (19) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்காத காரணத்தினால் தான் இன்று அமைதியான முறையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாடகம் தொடர்ந்தும் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரீட்சாதிகளுக்கான அடையாள அட்டையில் குறைபாடிருப்பின் தெரியப்படுத்துங்கள் ; அரச தகவல் திணைக்களம்!

பரீட்சாதிகளுக்கான அடையாள அட்டையில் குறைபாடிருப்பின் தெரியப்படுத்துங்கள் ; அரச தகவல் திணைக்களம்!


எதிர்வரும் டிசம்பர் மாதம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில், 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை மூன்று இலட்சத்து 95 ஆயிரம் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

இவற்றில் மூன்று இலட்சத்து 92 ஆயிரம் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பரீட்சார்த்திகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின், இது தொடர்பில் உடனடியாக தெரியப்படுத்துமாறு, திணைக்களம் பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


(அரசாங்க தகவல் திணைக்களம்)
மஹிந்த ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க நாம் தீர்மானித்துள்ளோம்; மனோ கணேசன் எம் .பி

மஹிந்த ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க நாம் தீர்மானித்துள்ளோம்; மனோ கணேசன் எம் .பிஇது தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் என சொல்லப்படுவது ஒரு நிழல் அரசாங்கம் ஆகும். அதன் பிரதமர் எனப்படும் மகிந்த ஒரு நிழல் பிரதமர் ஆவார். அதன் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் நிழல் அமைச்சர்கள் ஆவர்.

இவர்களின் முழு நேர தொழில் இன்று பாராளுமன்றத்தில் மிளகாய் பொடி தூவுவதும், நமது ஆட்சி ஆரம்பித்து வைத்த “கம்பெரலிய” என்ற ஊரெழுச்சி வேலைத்திட்டங்களை இடை நிறுத்தி வைப்பதும் ஆகும்.

எனவே இந்த மிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க நாம் தீர்மானித்துள்ளோம் .

நாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளது. அரசாங்க அமைச்சுகளின் எந்த ஒரு நிதி ஒதுக்கீட்டு மற்றும் செலவு நடவடிக்கைகளும், பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, பாராளுமன்றம் ஏற்றுக்கொண்ட பின்னரே செல்லுபடியாகும்.

அதேபோல், கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்ட, நிதி ஒதுக்கீடுகளை கண்காணிக்கும், இடை நிறுத்தும் அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது.

இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நமது தரப்பிடமே பெரும்பான்மை உள்ளது. இந்த சிறுபான்மை மிளகாய் பொடி அரசாங்கத்தை சட்டவிரோதமாக நடத்தி வருவதாக சொல்லப்படும் கும்பலில் இருக்கின்ற அமைச்சர்கள் எனப்படுவோர் விடுக்கும் எந்த ஒரு ஆணையையும் கருத்தில் கொள்ள வேண்டாம் என அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நாம் அறிவித்துள்ளோம். இதைமீறி செயற்படும் அதிகாரிகள் எதிர்காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.


இதன் ஒரு அம்சமாக நாம் எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றும் முகமாக, பிரதமர் அலுவலக செயலாளரின் நிதி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பிரேரணையை இன்று சபாநாயகரிடம் கையளித்துள்ளோம்.  இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதை தொடர்ந்து, இந்த மிளகாய்ப் பொடி மகிந்த ஆட்சியின், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எதிராகவும் நாம் இத்தகைய பிரேரணைகளை கொண்டு வருவோம். இந்த நிழல் ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை நாம் முற்றாக முடக்குவோம்.

திருட்டுத்தனமாக ஆட்சியை பிடித்துவிட்டு, இன்று பாராளுமன்றத்தில் வரலாறு காணாத அட்டகாசங்களை செய்துவரும் இந்த கும்பலுக்கு, நாம் வழி விட்டு ஒதுங்கி நிற்போம் என ஒருவரும் கனவு காண கூடாது. இதைத் தவிர பாராளுமன்றத்தில் எந்த ஒரு சட்டமூலத்தையும் நிறைவேற்ற இதன் சட்டவிரோத நிழல் ஆட்சி மிளகாய் பொடி கும்பலுக்கு நாம் இடம் கொடுக்க மாட்டோம். இந்த முடிவு ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றில் வெறும் பத்து நிமிட அமர்வுக்கு பல கோடி செலவு

பாராளுமன்றில் வெறும் பத்து நிமிட அமர்வுக்கு பல கோடி செலவு

இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்று வந்த குழப்ப நிலை நாட்டு மக்களிடம் மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் பெரும்பாலான பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் நாளொன்றுக்கான செலவு தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி நாடாளுமன்றத்தின் நாளொன்றுக்கான செலவு சுமார் இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா என தகவல் அறியும் சட்டமூலத்திலிருந்து தெரியவருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டில் 95 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமர்வுகளுக்காக மொத்தம் 245 கோடி ரூபா வரையில் செலவாகியுள்ளமை தெரியவருகிறது.மேலும் இறுதியாக நடைபெற்ற 3 நாடாளுமன்ற அமர்வுகளும் குழப்பகரமானதாகவே இருந்து வந்த நிலையில் இவற்றுக்கு மாத்திரம் 8 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் பத்து நிமிடங்கள் தான் நாடாளுமன்றம் நடைபெற்றுள்ளது. எனினும் ஒரு அமர்விற்கான செலவு பல கோடிகள் என கூறுப்படுகிறது.எனவே இன்றைய தினம் சில நிமிடங்கள் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றதால் அர்த்தம் இருக்கிறதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் பதிலளிக்கையில்,

இன்றைய நிமிடம் சில நிமிடங்களே நாடாளுமன்றம் கூடிய போதிலும் கூட நாடாளுமன்றத்தை வழமையான நிலைக்கு கொண்டு வரக்கூடிய செயற்பாடாக இதனை கருத முடியும்.

கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றம் கூடிய போதும் கூட அதாவது சபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட பின் நாடாளுமன்றம் கூடும் போது நாடாளுமன்றத்தில் நிலையாக இருக்கக்கூடிய குழுக்கள் என்பன இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.

எனவே அந்த குழுக்களை மீளவும் உருவாக்கும் நோக்கில் தான் நிச்சயமாக நாடாளுமன்றம் கூடியது. அதனை கூடுவதற்கான ஏற்பாடுகளை தான் சபாநாயகர் அறிவித்தார்.மேலும் எதிர்வரும் 29ஆம் திகதி கூட்டப்படும் நாடாளுமன்றத்தில் அனைத்து செயற்பாடுகளும் வழமைக்கு திரும்புவதுடன், நிலையான அரசாங்கம் எது என்பதும் தீர்மானிக்கப்படும் என தெரிவித்தார்.

எனினும் சில நிமிடங்கள் நடத்தப்பட்ட நாடாளுமன்ற அமர்விற்காக பல கோடிகள் செலவிடப்பட்டுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் உலக சாதனை படைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Chilli attack: Gamini Jayawickrama to take legal action

Chilli attack: Gamini Jayawickrama to take legal action

UNP MP Gamini Jayawickrama Perera said today he would take legal action in connection with the attack made on him in parliament on Friday.

He said he would first complaint to the Police and then proceed to take legal action in the court.Mr. Perera was attacked with chilli powder mixed with water during the tense situation in parliament last Friday.

“The punishment as laid down in the Parliament Act is not sufficient for such deplorable behaviour. MPs of both parties have to be blamed. I believe other MPs will do the same. This decision was made to ensure that similar events will not occur in future. I will also seek further action following the court decision,” he said. Ceylon Muslim News Srilanka 
மகிந்தவை நீக்க ஆதாரம் காட்டுங்கள் - மைத்திரி ஆவேசம்

மகிந்தவை நீக்க ஆதாரம் காட்டுங்கள் - மைத்திரி ஆவேசம்


நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கான ஆதாரம் எங்கே என நேற்றைய தினம் அனைத்து கட்சி மாநாட்டில் வைத்து கேள்வியெழுப்பியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் அதனடிப்படையில் ஜனாதிபதி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததையடுத்தே இவ்வாறு கேள்வியெழுப்பப் பட்டுள்ளது. 
 
ஊடகங்கள் ஊடாக உலகமே இதை அவதானித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப் பட்ட போதிலும் ஹன்சார்டில் அவ்வாறு எதுவும் பதிவாக வில்லையென உதய கம்மன்பில தெரிவித்திருந்ததோடு குறிப்பிட்ட தினங்களின் ஹன்சார்டும் சபையில் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முறைப்படி ஹன்சார்டில் பதியப்படாதமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரணிலுக்கு நாடாளுமன்றில் 113 பேரின் ஆதரவு இல்லவே இல்லை

ரணிலுக்கு நாடாளுமன்றில் 113 பேரின் ஆதரவு இல்லவே இல்லை


ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் 113 பேரின் ஆதரவு இல்லவே இல்லையென தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.

தமக்கான வாய்ப்பும் தேவையும் வரும் போது தமது தரப்பு நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் எனவும் தெரிவிக்கின்ற அவர், முறைப்படி ஐந்து நாட்கள் காத்திருந்து நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர ரணில் விக்கிரமசிங்க தயங்குவது இதன் காரணத்தினாலேயே என தெரிவிக்கின்ற அவர், ரணிலுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தெரிவிக்கிறார்.

இன்றைய தினம் மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், சபை அமர்வுகள் மீண்டும் குழப்ப நிலையை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் இன்று நம்பிக்கையில்லா பிரேரணையைத் தவிர்த்து வாக்கெடுப்பொன்றை நடாத்துவதற்கே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி செய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
FR petition filed against convening of Parliament

FR petition filed against convening of ParliamentFormer UPFA MP Sarath Weerasekara has filed a Fundamental Rights (FR) petition in the Supreme Court today saying that the Parliament Secretary General has no power to convene Parliament when a stay order against the dissolution was in place.
ஐந்து நிமிடங்கள்தான் இன்று பாராளுமன்றம் நடந்தது!

ஐந்து நிமிடங்கள்தான் இன்று பாராளுமன்றம் நடந்தது!


தொடர்ச்சியாக மைத்திரிபால சிரிசேன பாராளுமன்றத்தில் ''குரல்வழி வாக்கு " மூலம் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க பாடசாலைக்குப் போக மறுக்கும் சிறுபிள்ளையைப் போல் அடம்பிடிப்பதனால் பெயர் கூறி வாக்கெடுப்பதற்கு பிரேரிக்கப்பட்ட போது மஹிந்த தரப்பினர் மீண்டும் மறுத்தனர்.

இனியும் தொடர்ச்சியாக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றுவதில் அர்த்தமில்லை.அது எப்படியும் திட்டமிடப்பட்டு ஜனாதிபதியால் நிராகரிக்கப்படத்தான் போகிறது.அதற்கு மாற்றீடாக ஒரு புத்திசாலித்தனமான பிரேரணையை பெரும்பான்மைத் தரப்பினர் இன்று பாராளுமன்றச் செயலாளரிடம் சமர்ப்பித்தனர்.

சபாநாயகரையும்,பெரும்பான்மை உறுப்பினர்களையும் பொறுத்தவரைக்கும் அரசாங்கமோ அல்லது பிரதமரோ இல்லை. அதையும் தாண்டி நான்தான் பிரதமர் என்று சொல்லிக் கொண்டும்,அமைச்சரவை என்று சொல்லிக் கொண்டும் இருப்பவர்களுக்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினரின் சக்தி என்ன என்று காட்டுகிறோம் பார் என்று இன்று ஒரு பிரேரணையை சமர்ப்பித்தார்கள் பெரும்பான்மைத் தரப்பைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள்.

அரசியல் யாப்பின் 148ம் சரத்தில் பொது நிதியினைக் கையாளும் பூரண அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் பிரதமர் என்று சொல்லிக் கொள்ளும் மஹிந்தவின் அலுவலகத்திற்கு எந்தவித நிதியும் செல்லக் கூடாது என்று ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டது.

அவர்கள் கேட்பதைப் போல 5 நாட்கள் கொடுத்து எதிர்வரும் 29ம் திகதி விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு எடுக்கப்படும்.அது நிறைவேற்றப்பட்டால் மஹிந்தவின் அலுவலகம் ஒரு சதத்தைக் கூட செலவு செய்ய முடியாது.இதனை ஒரு எச்சரிக்கையாகவே பெரும்பான்மைத் தரப்பினர் செய்து காட்டுகிறார்கள்.இப்படி ஒவ்வொரு அமைச்சுக்கும் எங்களால் செய்ய முடியும் என்ற செய்தியைச் சொல்வததுதான் அவர்களின் நோக்கம். பெரும்பான்மை இல்லாது அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால் பெரும்பான்மை இருப்பவர்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்லிக்காட்டுவதுதான் இவர்களின் நோக்கம்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்று ஆட்சியை பெரும்பான்மையினரின் கைக்குத்தா இல்லாவிடில் உனது பொய் அரசாங்கத்தால் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு இனி நடக்கும் என்ற செய்தியை பெரும்பான்மையினர் இன்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

உலக அரசியல் வரலாற்றில் எப்பொழுதும் இல்லாதவாறு பெரும்பான்மை இல்லாதவர்களை அரசாங்கத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருப்பது இலங்கையில்தான்.இதன் விளைவாக முழு நாடும் ஸ்தம்பிதமடையும்.

இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய சமூகமளிக்கவில்லை.அவ்வாறு அளித்திருந்தால் இந்தப் பிரேரணையையும் அவர் ஏற்றுக் கொண்டால் கட்சி சார்பாக நடக்கிறார் என்று சொல்வார்கள் என்பதால் அவர் சமூகமளிக்காமல் இருந்திருக்கலாம்.

பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 10 மணிக்கு கூடுகிறது.

இந்த இழுபறி நிலை அடுத்த தேர்தல் வரைக்கும் செல்லப்போகிறது.அதற்கிடையில் நாடு சின்னாபின்னமாகப்போகிறது.

மைத்திரி என்ற ஒரு தனிமனிதனின் ஜனாதிபதிக் கனவிற்கும்,மஹிந்தவ என்ற தனிமனிதனின் பதவி ஆசைக்குமிடையில் சிக்கி இந்த நாடு பற்றி எரிகிறது.

(Raazi Muhammadh Jaabir)
மகிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனம்?

மகிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனம்?

பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரங்களுக்காக குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொaள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வௌியிடப்பட்டுள்ளன. 

மேலும் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியே அந்த இரண்டு வாகனங்களையும் கொள்வனவு செய்ததாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவிவருகின்றது.

அவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதன் மூலம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்காக இதுவரை எந்த புது வாகனங்களும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்நியோன்யமாக வாழ முஸ்லிம்கள் பழகிக்கொள்ள வேண்டும் ;- அமைச்சர் பைஸர் முஸ்தபா!

அந்நியோன்யமாக வாழ முஸ்லிம்கள் பழகிக்கொள்ள வேண்டும் ;- அமைச்சர் பைஸர் முஸ்தபா!

மனித சமூகத்தின் மா பெரும் பொது முதுசம், அனைத்து சமூகங்களினதும் சத்தியப் பேரொளி
இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வியல் முன்மாதிரிகள், மனித குலத்தை மீட்சிக்குமென, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, தனது மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மீலாத் தினத்தை முன்னிட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அராஜகம், அறியாமை சூழ்ந்திருந்த பண்டைய அரேபிய தீப கற்பத்தில் தீர்க்கதரிசி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறப்பும், போதனைகளும் பெரும் சீர்திருத்தத்தை ஏற்படுத்தியிருந்தன. மனிதாபிமானத்துக்கு மதிப்பளித்து, மானிடத்தை மதிப்பதில், இஸ்லாம் பெரும் சாதனை நிலைநாட்டியது.
வர்க்க, குல மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, சமத்துவத்தை நிலை நாட்டும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கோட்பாடுகள், உலக அமைதிக்கு வழிகோலும்.
சமய சிந்தனைகளூடாக, சமூகத்தை நேர்வழிப்படுத்திய முஹம்மது நபி (ஸல்) அவர்கள், மனித நேயமுள்ள சமூகக் கட்டமைப்பை நிறுவுவதில் வெற்றியீட்டி னார்.
அன்னாரைப் பின்பற்றும் முஸ்லிம்களும், உயர்ந்த சமூக நெறிக்காக உழைப்பதே, இன்றுள்ள தேவையாகவுள்ளது.
சந்தர்ப்பவாதம், சுயநலம், காட்டிக் கொடுப்புக்கள் மலிந்துபோயுள்ள இன்றைய அரசியலில், முஸ்லிம்கள் மிக முன் மாதிரியாக நடந்துகொள்ளல் அவசியம்.
அதிலும் விசேடமாக, முஸ்லிம் அரசியல் தலைமைகள், மிகக் கவனமாக காய்களை நகர்த்துவதே, எமது நாட்டு முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்குள்ள ஒரே வழியாகும்.
பிரிவினை வாதம், மத வாதத்தைத் தூக்கிப்பிடித்து, ஏனைய சமூகங்கள் மத்தியில் தனித்துவங்களைத் திணிக்க முனைவது, நாட்டின் இன்றைய நிலைமைகளுக்குப் பொருந்தாது என்பதே எனது நிலைப்பாடு.
எனவே, இஸ்லாத்தின் உயரிய கோட்பாடுகளான சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு மற்றும் புரிந்துணர்வுடன், ஏனைய சமூகத்தினருடனும் அந்நியோன்யமாக வாழ முஸ்லிம்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், மீலாத் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மைத்திரி- மகிந்த அரசுக்கு எதிராக,போராட்டம் வெடிக்கும் - ரவூப் ஹக்கீம்

மைத்திரி- மகிந்த அரசுக்கு எதிராக,போராட்டம் வெடிக்கும் - ரவூப் ஹக்கீம்


தற்போதைய சட்டவிரோத அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அடக்குமுறைகள் மூலம் ஆட்சியை பிடித்துக் கொண்டுள்ள சட்டவிரோத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போலி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பிலும் டுவிட்டர் பதிவிலும், ஹக்கீம் இந்த விடயங்களை இன்று தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் விரைவில் விடுதலை: மைத்திரி நடவடிக்கை

ஞானசார தேரர் விரைவில் விடுதலை: மைத்திரி நடவடிக்கை

பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் உள்ளிட்ட தரப்பினர் இன்று (19) முற்பகல் கலபொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில்  அறிக்கையொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர் . 
குறித்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து சுமூகமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி , அத்தேரர்களினால் கலபொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் பிரதமரின் மீலாத் தின செய்தி!

முன்னாள் பிரதமரின் மீலாத் தின செய்தி!சமயம்;, இனம், குலம், வகுப்பு, நிறம் என்றவாறு பல வகையில் வேறுபட்டுப் பிரிந்து காணப்படும் தற்போதைய சமூகத்திற்கு முஹம்மத் நபியவர்களின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள முடியுமான பல பாடங்கள் உள்ளன. அவர் சமயத்தை நடைமுறைரீதியாக வாழச் செய்த, எளிமையான, சிறந்ததோர் வாழ்வொழுங்குடன் கூடிய, சாதாரண மக்கள் மத்தியில் சாதாரண மனிதராக வாழ்ந்த உன்னத இறைத்தூதர் ஆவார்.

பல சந்ததிகளாக கோத்திரங்களாப் பிரிந்து வேறுபட்டு முரண்பட்ட நிலையில் காணப்பட்ட மத்திய கிழக்கு மக்கள் மத்தியில் முஹம்மத் நபியவர்களின் வாழ்க்கைத் தத்துவம் மற்றும் சமய ஒழுங்குகள் சமயரீதியான சிறந்ததோர் சமூகம் உருவாவதற்குக் காரணமாய் அமைந்தது. இஸ்லாம் சமயத்தின்படி அவர் இறைவனின் விருப்புக்குரிய இறுதி நபி எனக் கருதப்படுகிறார்.

நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரி எமது ஆட்சியமைப்புக்கும் பொதுச் சமூகத்திற்கும் மிகவும் அவசியமான ஒரு சந்தர்ப்பமாக இன்றைய சூழ்நிலை காணப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கடந்து மூன்று வருடங்களில் நாம் பெற்றுக்கொண்ட ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் மானிட கௌரவம் என்பவற்றை அழித்து நாட்டினைப் படுகுழியில் தள்ளிவிடக் கூடிய கொடியதோர் சூழ்ச்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாம் நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரியை மிகவும் பின்பற்ற வேண்டியவர்களாக காணப்படுகிறோம்.

அந்த உன்னதமான பொறுப்பினைக் கைவிடாது இச்சந்தர்ப்பத்தில் கண்ணியமான சமூகமொன்றுக்காகவும் அமைதியான தேசமொன்றுக்காகவும் பாடுபடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது கௌரவபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எம்மீது வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ற வகையிலும் ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையிலும் நாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இலங்கைவாழ் சகோதர முஸ்லிம்கள் உட்பட அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும் சிறப்பான மீலாத் தினமாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.


ரணில் விக்கிரமசிங்க,

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்


மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை; மஹ்ரூப் எம் பி !

மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை; மஹ்ரூப் எம் பி !

அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து, நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராடி வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி தெரிவித்தார்.

ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்துவரும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் நாம் போராடி வருவதை திரிபுபடுத்தி, எமது கட்சி தமது கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு, ஏனைய கட்சிகளுடன் இரண்டறக் கலந்து விட்டது – சங்கமித்து விட்டது – தேர்தல் கூட்டுக்காக ஒன்றித்து விட்டது என்று எவரும் நினைக்கத் தேவையில்லையென்றும் அவர் குறிப்பிட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறான விடயங்களில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டுடனும் உறுதியுடனும் இருப்பதாக அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி தெரிவித்தார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற கட்சியின் ஆதரவாளர்கள் சந்திப்பின் போதே தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி, தற்போதைய அரசியல் நெருக்கடி, கட்சியின் எதிர்காலச்செயற்பாடுகள், சமூகத்தின் மீதான அக்கறை குறித்து மிகவும் தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

“எமது கட்சியின் தலைமையானது இறைவனைத் தவிர எவருக்கும் சரணாகதியடையாது. சோரம் போகவும் மாட்டாது. எமது கட்சிக்கொள்கைகளை தூக்கியெறிந்துவிட்டு, நமது தனித்துவத்தைக் கைவிட்டு விட்டு, அதன் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு நாம் அரசியல் செய்யமாட்டோம்.

சமூகத்தின் மீதான பாதுகாப்பு, அக்கறை காரணமாகவே நாம் இந்த ஜீவ மரணப் போராட்டத்தில் இத்தனை நாட்களாக குதித்து வருகிறோம். பட்டம், பதவி, பணத்துக்காக நாம் ஒரு போதும் சோரம் போகவும் மாட்டோம். பின்வாங்கவும் மாட்டோம், அடி பணிந்து அரசியல் செய்யவும் மாட்டோம். அதே போன்று நீங்கள் எமது கட்சிக்கும் தலைமைக்கும் தந்த ஆணையை ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்யப்போவதுமில்லை.” இவ்வாறு அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, இறைவனுக்கு அடுத்தபடியாக நமது சிறுபான்மைச் சமூகத்திற்கு அரசியலமைப்பே பாதுகாப்பு அரணாகும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய மீயுயர் அரசியலமைப்பை சகட்டு மேனிக்கு கையிலெடுத்து ருத்ர தாண்டவமாடும் எதேச்சதிகாரத்துக்கு நாங்கள் துணை போனால் எமது சமூகத்தை படுகுழியில் தள்ளுவதாகவே முடிந்துவிடும். எனவே சமூகக் கட்சியென்ற

வகையில் இதனை நாங்கள் கைகட்டி, வாய் பொத்தி வாளாவிருக்க வேண்டுமென்று சிலர் நினைப்பது தவறானது.

அந்த வகையிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது ஜனநாயக நீரோட்டத்தைப் பாதுகாக்க விரும்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஜனநாயகப் போராட்டத்தை நடாத்தி வருகின்றது. அதனை பிழையாக அர்த்தப்படுத்தி எமது கட்சிக் கொள்கைகளை நாம் தூக்கியெறிந்துவிட்டு பிற கட்சிகளுடன் சங்கமித்துக் கொண்டுவிட்டோம் என்று எவரும் நினைக்கத் தேவையில்லை.

கடந்த காலங்களிலும் சமுதாயத்திற்கான போராட்டத்திலும் பிரச்சினைகளிலும் சில கட்சிகளுடன் இணைந்தும் பயணித்திருக்கின்றோம் என்பதை நீங்கள் அனைவரும் மனதில் இருத்திக்கொண்டு, அந்த வகையான இன்னொரு வடிவமாகவே இந்த ஜனநாயகப் போராட்டத்திற்கான இந்த இணைந்த பயணத்தை நோக்க வேண்டுமென்பதையும் நான் நினைவுபடுத்தி எமது கட்சியானது எதிர்காலத்திலும் சமூக போராட்டங்களில் முன்னின்று செயற்படுமென்பதை கட்சிப்போராளிகளாகிய உங்களிடம் உறுதியாக தெரிவிக்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடகப்பிரிவு-

தனக்கே வினையாகிப் போன ரணிலின் ராஜதந்திரம்!

தனக்கே வினையாகிப் போன ரணிலின் ராஜதந்திரம்!

ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முக்கிய வாக்குறுதியாக முன்வைக்கப்படுவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிப்புதான்.2015 ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறே.இந்த அதிகாரம் ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி மைத்திரி-ரணில் தரப்பு வெற்றி பெற்றபோதிலும் இதை இல்லாதொழிக்கும் திட்டம் ரணிலிடம் இருந்ததில்லை.


2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகும் திட்டம் ரணிலிடம் இருந்தது.அந்தத் தேர்தலில் தனக்கு சவாலாக இருக்கப்போகின்ற இரண்டு முக்கிய புள்ளிகளான மஹிந்தவையும் மைத்திரியையும் ஓரங்கட்டும் வியூகத்தை ரணில் வகுத்தார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக முதலாவது ஆப்பை மஹிந்தவுக்கு வைத்தார்.ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக முடியாது என்ற திருத்தமே அந்த ஆப்பு.அதில் வெற்றியும் கண்டார்.அடுத்த ஆப்பை மைத்திரியை நோக்கிக் கொண்டு சென்றார்.

சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி-மைத்திரி-மஹிந்த அணிகள் என இரண்டு அணிகளை உருவாக்குதல்,ஓர் அணி மைத்திரியையும் மஹிந்த அணி வேறு ஒருவரையும் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறக்கச் செய்தல்.அப்போது சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி இரண்டாக பிளவுபடும்.அது ரணிலின் வெற்றிக்கு வாய்ப்பாக அமையும்.

இதுதான் ரணிலின் அடுத்த வியூகமாக இருந்தது.ஆனால்,அந்த வியூகம் வெளிப்படையாகத் தெரிந்ததால் உசாரானார் மைத்திரி.அந்த வியூகத்தை உடைப்பதற்குத் திட்டம் தீட்டினார்.தான் அடுத்து என்ன செய்யப் போகின்றேன் என்று இறுதி வரையும் வெளிப்படுத்தாத மைத்திரியின் அந்த பலம் இப்போது ரணிலின் வியூகத்தை உடைப்பதற்கு உதவியது.

19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது அதனூடாக நிறைவேற்று அதிகாரத்தையும் முற்றாக ஒழித்திருந்தால் ரணிலுக்கு இப்போது இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் மஹிந்த இனி ஒருபோதும் ஜனாதிபதியாகி விடக்கூடவே கூடாது என்பதில் குறியாக இருந்தார்களே தவிர நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதில் கவனம் செலுத்தவில்லை.அதற்கு காரணம் ரணில்தான்.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு அதிகாமான வாய்ப்பு இருந்தது மைத்திரி-ரணில் அரசில்தான்.இனி அப்படியொரு வாய்ப்பு-மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பது சாத்தியமில்லை.

தான் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ஆக வேண்டும் என்பதற்காக ரணில் வகுத்த வியூகம் அவருக்கே ஆபத்தாக மாறிவிட்டது.நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி நினைத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கின்ற நாடாளுமன்றத்தைக்கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் தற்போதைய அரசியல் கூத்துக்களில் இருந்து காணக்கிறோம்.

இப்படிப்பட்ட சர்வாதிகாரம் கொண்ட-தனி ஒருவரின் தேவைக்காக மக்களின் உயர் சபையை அவமதிக்கின்ற நிறைவேற்று அதிகாரம் நீடித்து நிற்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி உட்பட அதனுடன் கைகோர்த்து நிற்கின்ற கட்சிகள் அனைத்துமே பொறுப்பு.அதன் பலனை நன்றாக அனுபவியுங்கள்.[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்]