அந்தரங்கங்களை பசீர் ஒருபோதும் வெளியிடமாட்டார் இது உறுதி!

NEWS


முஸ்லிம் காங்கிரசின் அந்தரங்கங்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் சி.டிக்களை பசீர் சேகுதாவூத் ஒரு போதும் இணையத்திலோ அல்லது பகிரங்க இடங்களிலோ வெளியிடமாட்டார் என கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்  பேரவை அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கட்சியின் முக்கியஸ்தர்களும் முதலில் தவறுகள் செய்தது சமூகத்திற்கு செய்த மாபெரும் துரோகம், முஸ்லிம் சமூகத்தை அரசியலால் ஏமாற்றி சமூகத்தை விற்று பணம் சேர்த்து வயிறு நிரப்பியது பாரிய குற்றம் இந்தக் குற்றத்தை செய்தவர்கள் பதவி விலக வேண்டும்.

இதுபற்றிய ஆவணங்களை வெளியிடுவது முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்யமானது அல்ல காரணம் முஸ்லிம்களை இன்று இழிவாக பேசும் இனவாத அமைப்புக்கள் இதனை காரணமாக காட்டி வேறு விதத்தில் பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம். இதனை காரணமாக கொண்டு இதனை பகிரங்க இணையங்களில் வெளியிடவோ அல்லது பொது தளங்களில் வெளியிடவோ கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறோம். இதனை பசீர் சேகுதாவூத் ஏற்றுக்கொள்ளுவார் எனவும் நம்புகிறோம்.

தயவு செய்து ஜம்மியதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில், சூறா கவுன்சில் ஆகிய அமைப்புக்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம
Tags
3/related/default