தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் மற்றும், விபத்துக்களை தவிர்ப்பதற்கு சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்,இடதுபக்க ஒழுங்கில் வாகனத்தை செலுத்த வேண்டும் எனவும்,ஏனைய வாகனங்களை முந்திச்செல்லும் போது மட்டும், வலதுபக்க ஒழுங்கை பயன்படுத்தவும் அறிவுருத்தப்பட்டுள்ளனர். வாகனத்தை சிரான மற்றும் கட்டுப்படுத்தும் வேகத்தில் செலுத்த வேண்டும், மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றிகள் live360

0 கருத்துகள்