பாறுக் ஷிஹான்
காணி விடுவிப்பு
தொடர்பாக ஆராயும் கூட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற
பிரதிநிதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கூட்டம் இன்று (21)
யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அரசாங்க
அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசிய
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா தர்மலிங்கம்
சித்தாத்தன் எம்.ஏ.சுமந்திரன் ஈ.சரவணபவன் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் உட்பட
யாழ் மாவட்ட காணி மேலதிக செயலாளர் எம்.முரளிதரன் மற்றும் யாழ் மாவட்ட 15
பிரதேச செயலாளர்கள் பாதுகாப்பு படைத்தலைமை உயர் அதிகாரிகள் மீள்குடியேற்ற
செயற்றிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில்
விடுவிக்கப்படவேண்டிய இடங்களில் இராணுவத்தினர் மக்களின் காணிகள் இருப்பது
தொடர்பான விடயங்கள் மற்றும் விடுவிக்கப்பட இருக்கும் சில பகுதிகள் அரச
தனியார் காணிகளின் தற்போதைய நிலைமைகள் தற்போது மீளக்குடியேறிய மக்களுக்கான
திட்டங்கள் ஏனைய இதர தேவைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
