டெங்கு குடம்பிகள் காணப்பட்டால் அரச நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்படும்



அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் பரிசோதனை செய்து, அங்கு டெங்கு நோய் பரவக்கூடிய இடம் காணப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனுடன் கட்டுமான பணிகள் இடம்பெறும் இடங்களில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டால் குறித்த நிறுவனங்களின் அனுமதி பத்திரம் ஒரு மாதம் ரத்து செய்யப்படும் என அவர் மேலும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.