அனைத்து எம்.பி. களினதும் சொத்துக்களை ஆவணப்படுத்த நடவடிக்கை

NEWS
0 minute read
0


சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நிதி நிலவரம் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்களை, பொது மக்கள்  பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில், ஆவணப்படுத்த நடவடிக்கை   முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்காக வேண்டி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றுமன்றி, அவரது தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள் உட்பட குடும்பத்திலுள்ள சகல உறுப்பினர்களினதும் வருமானம் தொடர்பிலான தகவல்களை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு எம்.பி. களினால் வழங்கப்படும் தகவல்களை வைத்து “பாராளுமன்ற உறுப்பினர்களின் வருமான விபரங்கள்” எனும் பெயரில் ஆவணமொன்றை தயார் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பொது மக்களில் கோருபவர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)