FILE IMAGE
பலூன் தொண்டையில் சிக்கியதில் 7 வயதான சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பண்டாரவளை - நாயபெத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தனது நண்பர்களுடன் பலூன் ஊதி விளையாடிக் கொண்டிருந்த போது பலூன் வெடித்து தொண்டையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுவன் பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை இவ்வாறு தெரிவித்தார் :
சம்பவம் நடந்த தினத்தில் நானும் எனது மனைவியும் கூலி வேலைக்கு சென்று விட்டோம். எமது இண்டு குழந்தைகளையும் பெரிய அம்மாவிடம் பார்த்துக்குமாறு கூறினேன்.
சிறுவன் ரொட்டி சாப்பிட்டு அயல் வீட்டு சிறுவர்களுடன் விளையாட சென்றுள்ளான். அங்கு சென்று பலூன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, பலூன் வெடித்து தொண்டையில் சிக்கியுள்ளது.
சிறுவன் பேச முடியாமல் வீட்டுக்கு வந்தான் இந்நிலையில் நான் பின் புறத்தில் தட்டினேன் . ரொட்டி துண்டு ஒன்று தொண்டையில் சிக்கி இருக்கும் என நான் நினைத்தேன் .
ஆனால் உயிரிழந்த பின்னர் பிரேத பரிசோதனையில் தான் அறிய வந்தது தொண்டையில் பலூன் சிக்கியுள்ளது என தந்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.