பிலியந்தலையில் கைக் குண்டுடன் ஒருவர் கைது.!

TODAYCEYLON

பிலியந்தலை - வெவல பிரதேசத்தில் கைக் குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
மேலும், சந்தேகநபர் பயணித்த முச்சக்கர வண்டியும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 
சந்தேகநபர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபர் என தெரியவந்துள்ளது. 
கைது செய்யப்பட்ட நபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
Tags
3/related/default