இலங்கை அணி இந்தியாவிடம் சகல போட்டிகளிலும் தோல்வி ரசிகர்கள் அதிருப்தி

TODAYCEYLON


இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் நேற்றும் வெற்றி பெற்றது.
இலங்கை அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய துடுப்பாட்டத்தின் போது, விராட் கோலி 110 ஓட்டங்களையும், ஜாதவ் 63 ஓட்டங்களையும் அணிக்காகப் பெற்றுக் கொடுத்தனர்.
இந்திய அணி இலங்கை அணியுடன் மோதிய சகல போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தவகையில், டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் முழுமையாக இந்தியாவே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ரசிகர்கள் அதிகம் அதிருப்தி கொண்ட போட்டிகளாக இப்போட்டிகள் காணப்பட்டன. இலங்கை அணி சந்தித்த தொடர் தோல்விகளினால் கிரிக்கெட் ரசிகர்கள்  கடந்த போட்டிகளின் போது மைதானங்களில் தமது உச்ச கட்ட அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Tags
3/related/default