துபாயில் 64 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஒட்டக மருத்துவமனை



உலகில் முதல் முறையாக துபாயில் 64 கோடி ரூபாய் செலவில் ஒட்டகத்திற்கு என தனி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. துபாயில் முதல் முறையாக ஒட்டகத்திற்கு என தனி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. 64 கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அம்மருத்துவமனை இயக்குநர் பேசுகையில், 'குதிரைகளுக்கு தனி மருத்துவமனை உள்ளது. ஆனால் ஒட்டகத்திற்கு அமைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். எங்கள் பாரம்பரியத்தை காப்பாற்றுவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளோம். ஒட்டகத்திற்கு உணவு கொடுப்பது மட்டும் போதாது. அதற்கு தேவையான மருத்துவ உதவிகளும் செய்ய வேண்டும்.