மர்ம காய்ச்சலால் முல்லைத்தீவில் 9 பேர் பரிதாப மரணம்!



முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் ஒருவகை காய்ச்சல் காரணமாக 9 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவு வடமாகாண சுகாதார அமைச்சர் ஞானசீலன் குணசீலனை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் குறித்த தகவலை உறுதிப்படுத்தினார்.

அவர்கள் ஒருவகை வைரஸ் தாக்கத்தினாலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவற்றுள் பெருபாலானோர் இன்ஃபுலுவன்சா வைரஸ் தாக்கதினாலேயே உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

எனவே குறித்த வைரஸ் தொடர்பில் கொழும்பில் உள்ள மருத்துவமனைகளுக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.