இஸ்லாமியர்கள் தேசத்தை பற்றி கவலைப்படுவதில்லை; பாஜக

NEWS
0 minute read


இஸ்லாமியர்கள் தங்கள் மக்கள் தொகையை பெருக்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர் என்றும், தேசத்தை பற்றி கவலைப்படுவதில்லை என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. சிங்கால் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக அமைச்சர்களும், தலைவர்களும் தொடர்ந்து இஸ்லாமிய இஸ்லாமிய மக்களை பற்றி முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில்  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. சிங்கால் , இஸ்லாமியர்கள் தங்கள் மக்கள் தொகையை பெருக்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர் என்றும், தேசத்தை பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறியுள்ளார்.  

மேலும் ஹிந்து மக்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளை பெற்று அவர்களை வளர்க்கவும், படிக்க வைக்கவும் சிரமப்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் கவலையே இல்லாமல் குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர், மக்கள் தொகை, படிப்பறிவு, வளர்ச்சி குறித்து கவலைப்படுவதில்லை என்று கூறியுள்ளார். பாஜக எம்.எல்.ஏ.வின் இந்த கருத்து சமூக ஆர்வலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
To Top