விகிதாசார ஆசனத்தை புறத்தோட்ட வேட்பாளர் தீனுல்லாவிற்கு வழங்குங்கள் - மக்கள்
February 13, 2018
சுஹைல் அஹமட்
அட்டாளைச்சேனையில் அதிக அபிவிருத்தி தேவைகள கொண்ட புறத்தோட்ட வட்டாரத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விகிதாசார ஆசனத்தை தரவேண்டும் என தலைமையிடம் புறத்தோட்ட மக்கள் கேட்டுள்ளனர்.
இந்த வட்டாரத்தில் தேர்தலுக்கு முன்பிருந்து அபிவிருத்திப் பணிகளையும் வீதி செப்பனிடும் பணிகளையும் செய்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட தீனுல்லாவிற்கு அந்த ஆசத்தை தருமாறு அமைச்சர் ரிசாதிடம் கேட்டுள்ளனர்.
400க்கும் அதிகமான வாக்குகளை நாங்கள் உங்களுக்கு தந்திருக்கிறோம், அதனால்தான் உங்களுக்கு அந்த ஆசனம் கிடைக்கப்பெறவுள்ளது எங்களுக்கு தந்து எமது மக்களை அபிவிருத்தியடைச் செய்யுங்கள் எனவும் கேட்டுள்ளனர்.
பெரும்பாலும் கட்சியின் விகிதாசார ஆசனம் ஆளுமையுள்ள தீனுல்லாவிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags
