அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு எதிர்க்கட்சி தலைவராக முஸ்தபா முஹம்மட் வபா!

NEWS


சிலோன் முஸ்லிம் அக்கரைப்பற்று செய்தியாளர்


ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான போனஸ் ஆசனம் பிரபல அரசியல் மேடைப்பேச்சாளர் முஸ்தபா முஹம்மட் வபா அவர்களுக்கு கட்சித் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது, இதனடிப்டையில் இவரை எதிர்க்கட்சி தலைராக்க கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.

முஸ்தபா முஹம்மட் வபா தேர்தல் காலங்களில் பல மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்பு முக்கியஸ்தராகவும், பல ஊழல்வாதிகளின் உண்மைகளை எடுத்துரைக்கும் ஒருவராகவும் காணப்பட்டார், அத்தோடு இவருடைய இல்லம் தாக்கப்பட்டு மாற்றுக் கட்சி வேட்பாளர்களால் அச்சுறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலோன் முஸ்லிம் ஸ்தாபிக்க காலம் தொட்டு பணிப்பாளர் சபை உறுப்பினராக இருக்கும் முஸ்தபா முஹம்மட் வபா முஸ்லிம்களின் ஊடக நலன் குறித்து உரிமைகள் குறித்தும் சிந்திப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default