கண்டி கலவரம் குறித்து ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமருக்கு விளக்கம்!

NEWS


கண்டி கலவரங்கள் போன்ற இனக் கலவரங்கள் இதன்பிறகு நடைபெறாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறினார்.
கண்டிக் கலவரம் குறித்து தான் கவலையடைவதாகவும், எனினும், அதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை கச்சிதமாக முன்னெடுத்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நிலைமை தற்பொழுது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கலவரத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் பிரதமரிடம் தெளிவுபடுத்தினார். 


பாகிஸ்தானிலிருந்து இலங்கை செய்தியாளர்
 சிராஜ் எம். ஸாஜஹான்
Tags
3/related/default