சிரியா சிறுவர்களுக்காக ஐ.நா உப மாநாட்டில் இலங்கை - ஷமா முயிஸ் உரையாற்றவுள்ளார்!

NEWS


ஜெனீவாவில் பெப்ரவரி 26ம் திகதி முதல் மார்ச் 23ம் திகதி வரை  நடைபெற்று வரும் 37வது மனித உரிமை மாநாட்டில், மனித உரிமைக்கும், சமாதானத்துக்குமான சர்வதேச நிலையத்தினால் நடாத்தப்படும்  உப மாநாட்டில் "Children's Tragedy in the Conflict Zone" என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்.         

 

ராஜ தந்திரிகள், மனித உரிமை செயட்பாட்டாளர்கள், சர்வேதேச ஊடகவியலார்கள், நெறி முறை அவதானிகள் கலந்து கொள்ளும் இந்த உபநாட்டில் சிறுவர்களின் பாதுகாப்பு, மற்றும் யுத்த பிரதேசங்களில்அவர்கள் எதிர்கொள்ளும், பரிதாப நிலைமைகள் குறித்து ஆங்கிலம், பிரெஞ்சு  மொழிகளில் விளக்கமளிக்கவுள்ளார்.

 அக்குரணையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தற்பொழுது, ஜெனீவாவை அண்மித்த பிரான்ஸ் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  பிரான்ஸ் Saint Exupéry கல்லூரி 11வது வருட  மாணவியான   ஷமா முயிஸ்  காஷ்மீர், பலஸ்தீனம், சிரியா,  மியன்மார்,  மனித உரிமை மீறல் குறித்து ஜெனீவாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றி  வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default