பள்ளிக்கூடம் செல்ல மறுத்த குழந்தையை வண்டியில் வைத்து கட்டிகொண்டு சென்ற தந்தை

NEWS
0


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
பள்ளிக்கூடம் செல்ல மறுத்து அடம்பிடித்த சிறுமியை அவரது தந்தை தனது இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டி வைத்து கொண்டு சென்ற காட்சிகள் வைரலாகியுள்ளது.

சீனாவில்  தந்தையின் இருசக்கர வாகனத்தின் பின்னால் பிணைக்கப்பட்ட சிறுமியின் கால்கள்; ஆபத்தான முறையில்  கொண்டு செல்லப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை அடுத்து, குறித்த நபரை கைது செய்த போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் அந்த நபர், தனது மகளை பள்ளிக்கூடம் அனுப்புவதே மிகவும் கடினமான பணியாக உள்ளது. தினமும் அவளுடன் மல்லுக்கட்ட வேண்டி உள்ளது.   

சில நாட்களில் அவளை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றால் தான் உரிய நேரத்தில் பள்ளிக்கூடம் செல்ல முடியும். அதுபோன்றே சம்பவத்தன்று அடம் பிடித்த அவளை இருசக்கரவாகனத்தில் கட்டிவைத்து பள்ளிக்கூடத்திற்கு  அழைத்துச் செல்ல நேர்ந்தது என தெரிவித்துள்ளார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default