முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை அமுல்படுத்தும் காதி நீதிமன்றங்கள் தரமுயர்த்தப்படுவதுடன் சில மாவட்டங்களில் அவை நீதிவான் நீதிமன்றங்களின் தரத்தை ஒத்ததாக அமைய வேண்டும் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜம்இய்யத்துல் உலமா சபையின் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கலந்துரையாடல் நேற்று முன்தினம் இரவு கொழும்பில் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. உலமா சபையின் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்தனர்.
காதி நீதிபதிகளின் தரமும் உயர்த்தப்பட வேண்டுமெனவும் காதி நீதிபதிகளாக நியமனம் பெறுபவர்களுக்கு ஒரு வருட காலத்தில் பயிற்சிகளின் பின்பு பரீட்சையொன்று நடாத்தப்பட்டு பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கே பதவிக்காலம் நீடிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. தாபரிப்பு வ-ழக்குகளில் தாபரிப்பு செலுத்தாத பிரதிவாதிகளிடமிருந்து தாபரிப்பு பணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு தற்போதுள்ள சட்டத்தின் கீழ் காதி நீதிபதி நீதிவான் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளது. வலியுறுத்தக் கட்டளைகளை நீதிவான் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. இந்த அதிகாரம் காதி நீதிபதிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதனை அங்கீகரித்தனர்.
முஸ்லிம் விவாகரத்துச் சட்டத்திருத்த சிபாரிசுகளில் வயது, மத்தாஹ், பெண் காதி நியமனம், ‘வலி’ என்பன பற்றியும் கலந்துரையாடப்பட்டன. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தனது நிலைப்பாட்டினை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தியது. பெண்கள் காதிகளாக நியமிக்கப்படாது காதி நீதிமன்றங்களில் ஜுரிகளாக, ஆலோசனைச் சபையில் உறுப்பினர்களாக, விவாக பதிவாளர்களாக நியமனம் பெறுவதை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.
‘வலி’ இல்லாது திருமணம் நடைபெறக்கூடாது என்பதிலும் உடன்பாடு காணப்பட்டது. பெண்களின் திருமண வயதெல்லை 16 – 18 ஆக இருக்க வேண்டுமெனவும் இவ்வயதுக்குக் குறைந்த பெண்களின் திருமணம் விசேட தேவை நிமித்தம் நடைபெற வேண்டுமென்றால் காதி நீதிபதியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
உலமா சபையுடனான சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம், ஹரீஸ், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், அப்துல்லா மஹ்ரூப், பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் உட்பட பிரதிநிதிகள் பங்கு கொண்டிருந்தனர்.
-Vidivelli