கட்சித் தலைவர்களுக்கிடையான கூட்டத்திற்கு சட்ட மா அதிபரை அழைக்க தீர்மானம்

Ceylon Muslim

எதிர்வரும் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலிற்கு சட்ட மா அதிபரை அழைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்டங்களை தொடர்பில் அறிவுரை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அவரிற்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (20) காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கே இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
Tags
3/related/default