![]() |
| Shakthi TV Ban in kalmunai Area | BAN NewsFirst |
கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் ஒருதலைப்பட்சமாக செய்திகளை ஒளிபரப்பி வருகின்ற சக்தி தொலைக்காட்சி சேவையை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் தடை செய்யுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் அனைத்து கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களையும் அறிவுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் செய்த முறைப்பாடுகளைத் தொடர்ந்தே முதல்வர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
DAN TV உள்ளிட்ட கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர் நிறுவனங்கள், முதல்வர் றகீப் அவர்களின் அறிவுறுத்தலை ஏற்று, கல்முனை முஸ்லிம் பிரதேசங்களில் சக்தி தொலைக்காட்சி சேவையை முடக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

