தனிப்பட்ட தகராறு காரணமாகவே ஏறாவூறில் முஸ்லிம் நபர் ஒருவரின் காருக்கு தீ வைப்பு..!

NEWS


தனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியிலுள்ள கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது.

கார் உரிமையாளருக்கு அடிக்கடி வரும் SMS, அவரை மிரட்டுவதாக வந்துள்ளதோடு, சென்ற மாதம் அவரது கார் இன்ஜினுக்குள் சீனி அள்ளிப்போட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இது விடயமாக ஏற்கனவே ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாக கார் உரிமையாளர் தெரிவித்தார்.

நேற்று மாலையும் அவரை பயமுறுத்தும் SMS வந்ததாகவும் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு 12.45 மணியளவில் வீட்டு வாசலில் போடப்பட்ட காருக்குள் வெடிப்பு சத்தம் கேட்டு கதவை திறந்த போது இருவர் ஓடிச் செல்வதை கண்டுள்ளார்.

Tags
3/related/default