முதலில் அந்த நாயை கட்டிப்போடவும் - பிரதமரிடம் ஞானசார வேண்டுகோள்

NEWS
0
தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர் அந்த நாயைக் கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

வெயாங்கொட, வடத்கல, கனேகந்த விகாரையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தேரர் இதனைக் கூறினார்.

இந்த நாட்டில் 2500 வருடங்கள் மதப் போதனை செய்து வருகின்ற பௌத்த பிக்குகளுக்கு செய்ய முடியுமான உயர்ந்த பட்ச இழிவை ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவர் செய்துள்ளார் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

தற்பொழுது நாட்டில் கூக்குரல் இட்டுத் திரியும் 90 இற்கும் அதிகமான பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டவர்கள் எனவும் அதனால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டதனாலேயே இவ்வாறு தேரர்கள் குரோதத்துடன் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளத்தில் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே ஞானசார தேரர் இதனைக் கூறியுள்ளார். 
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default