NTJயின் சந்தேக நபர் ரினாஸ் , விமான நிலையத்தில் கைது

NEWS
0
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

அன்சார் மொஹமட் ரினாஸ் என்ற நபரே பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் இணைந்து செயற்பட்டுள்ளதுடன், நுவரெலியாவில் பயிற்சி பெற்ற நபர் என்று தெரிய வந்துள்ளது. 

வௌிநாடொன்றுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default