மேலும் ஐவருக்கு கொரோனா - 100ஐ நெருங்கும் மொத்த எண்ணிக்கை

ADMIN
0


கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்றைய தினம் மேலும் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.


இதனை அடுத்து கொரொனா தொற்றுக்கு உள்ளான இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கை 91ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான முதலாவது இலங்கையரான, சுற்றுலா வழிகாட்டி, கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளதுடன், அவர் இன்றைய தினம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default