அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நாளை தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் சுகாதார நெறி முறையை மக்கள் பின்பற்றுவது கட்டாயமக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைக்காக செல்வோர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
