கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் விஷேட அறிவித்தல்.

ADMIN
0

சிறிலங்காவில் கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் விஷேட அறிவித்தலை விடுத்துள்ளது.

பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணி பெண்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு, நெஞ்சு அல்லது வயிறு வலி, சிசுவின் அசைவு குறைதல், உடலில் வீக்கம் அல்லது வேறு ஏதும் கடுமையான அசௌகரியம் ஏற்படுதல்.

அத்துடன் தரமான சேவையை வழங்கவும் மருத்துவமனையில் நெரிசலை குறைக்கவும் கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் முற்பதிவுகளை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default