இலங்கையில் ஒரு பயணியுடன் சேவையில் ஈடுபட்ட புகையிரதம்

ADMIN
0

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் புகையிரதத்தில் பயணிப்பதற்காக பெலியத்தை புகையிரத நிலையத்திற்கு ஒரு பயணி மாத்திரமே வந்துள்ளார் என தெரியவருகிறது. ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் இன்று காலை 5.10 மணிக்கு பெலியத்தையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகள் புகையிரதம் இயக்கப்பட்டுள்ளது

அலுவலகங்களில் பணியாற்றும் நபர்கள் கொழும்பு செல்ல வசதியாக இந்த புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் பெலியத்தையில் இருந்து பயணிக்க மூன்று பேர் மாத்திரமே பதிவு செய்திருந்தனர். எனினும் பதிவு செய்த மூன்று பேர் இரண்டு பேர் வருகை தரவில்லை என்பதுடன் ஒருவர் மாத்திரமே பெலியத்தையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளார்

பதிவு செய்யாத சிலர் புகையிரதத்தில் பயணிக்கும் நோக்கில் புகையிரத நிலையத்திற்கு வந்திருந்தனர். எனினும் அவர்களுக்கு பயணிக்க அனுமதி வழங்காத புகையிரத திணைக்கள அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

பயணிகளின் உடல் உஷ்ணத்தை பரிசோதித்து ஆசனங்களில் அமர செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புகையிரத நிலையத்தின் பாதுகாப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default