தெற்கு கலிபோர்னியாவில் கருப்பின இளைஞர்கள் இருவர் அடித்துக் கொலை!

ADMIN
0



அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், இரண்டு ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞர்கள் துக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஊடக அறிக்கையின்படி, 38 வயதான மால்கம் ஹார்ஷின் சடலம் மே 31 அன்று வடகிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள விக்டர்வில்லில் குடியிருப்பற்றவர்கள் தங்கும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடந்து பத்து நாட்களுக்குப் பிறகு, 24 வயதான ராபர்ட் புல்லர் என்ற இளைஞர் ஒரு மரத்தில் தொங்க விடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆனால் இந்த இரு வழக்கையும் உள்ளூர் பொலிசார் தற்கொலை என முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் பொலிசாரின் நடவடிக்கை தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இரு இளைஞர்களின் உறவினர்களும் பொதுவெளியில் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியாவில் கடந்த பல நாட்களாக கருப்பின ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால்,

ஆத்திரத்தில் எவரேனும் இந்த இரு இளைஞர்களையும் அடித்து மரத்தில் கட்டி தொங்க விட்டிருக்கலாம் என ஒரு தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.

முழுமையான விசாரணை முன்னெடுத்தால் மட்டுமே, இந்த இரு இளைஞர்கள் விவகாரத்தில் உண்மை வெளிவரும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ராபர்ட் புல்லர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என கூறும் அவரது நண்பர்கள், அவ்வளவு கோழையல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

கருப்பின மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறும் நிலையில், தங்களின் உறவினர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என நம்புவது மிக கடினம் என கூறியுள்ள மால்கம் ஹார்ஷின் குடும்பத்தினர்,

எங்களுக்கு விரிவான விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் இப்போது எஃப்.பி.ஐ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட ஷெரிப் அலுவலகம் விசாரணைகளை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default