இம்முறை கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியவற்றிற்கான திகதிகள் தொடர்பில் இந் நாட்களில் அறிவிக்காதிருப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு பரீட்சைகளையும் நடத்துவதற்கான திகதிகள் தொடர்பில் நேற்று அறிவிக்கப்படவிருந்தது.
எனினும், COVID – 19 தொற்றை கருத்திற் கொண்டு, திகதிகளை தற்பொது அறிவிக்காதிருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
