ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி 6 மணித்தியாலம் வாக்குமூலம்.

ADMIN
0


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (22) மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

ஐந்தாவது நாளாக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த 05ஆம் திகதி முன்னிலையாகினார்.

அவரிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் கடந்த 12ஆம் திகதி அங்கு முன்னிலையாகி சுமார் 06 மணித்தியாலம் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, 14 ஆம் திகதி மீண்டும் ஆஜராகி சுமார் ஐந்து மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கினார்.

பின்னர் கடந்த 17 ஆம் திகதியும், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 4 ஆவது தடவையாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆஜரானார்.
Tags
all

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default