ஸஹ்ரானின் மனைவியிடம் விசாரணை மேற்கொள்வதா? இல்லையா? குழப்பத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு.

NEWS
0


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தலைமை தாங்கியதாக கூறப்படும் ஸஹ்ரான் ஹசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா நேற்று (22) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள அவர் முதன் முறையாக வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்திருந்தார்.

இருப்பினும் தாக்குதல் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வரும் நிலையில் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்க முடியுமா என அரசாங்க சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன நீண்ட விளக்கம் வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் ஸஹ்ரானின் மனைவியிடம் விசாரணை மேற்கொள்வதா இல்லை என்ற தீர்மானம் இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


Tags
all

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default