முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிரான உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இன்று 30ஆம் திகதி நடைபெறவுள்ளன.
அதன்படி ,முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரம் தொடர்பில் முழு முஸ்லிம் சமூகமும் ஆறுதல் அடையும் வகையில் சிறந்ததொரு தீர்ப்பு வெளிவரவேண்டுமெனப் பிரார்த்திப்போமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
