3 சந்தேக நபர்கள் கைது 60 மில்லியன் ரூபாய் பறிமுதல்

ADMIN
0


போதைப்பொருள் விற்பனையால் ஈட்டப்பட்ட வருமானம் என்று சந்தேகிக்கப்படும் 60 மில்லியன் ரூபாய் பணத்தை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் நேற்று (19) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், இதன்போது 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் இவர்களிடம் இருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் போதைப் பொருள் வியாபாரத்தில் இருந்து சம்பாதித்தது என்று நம்பப்படும் பாரிய அளவிலான பணத்தொகை பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default