ஜனவரி 5 எமக்கான இறுதிச் சந்தர்ப்பம்.!!

 


மாலைதீவில் ஜனாஸா அடக்கும் முயற்சிகளை ஒரு சில அரசியல் தலைமைகள் வரவேற்றுள்ளனர். அதனது விளைவு எதிர்காலத்தில் எமது வாழும் உரிமையில் தாக்கம் செலுத்தக் கூடும். இது கூட்டாக தீர்மானிக்க வேண்டிய உணர்வுபூர்வமான உரிமைகளோடு தொடர்புபட்ட விடயம்.


கவனத்தில் கொள்ள வேண்டியவை...


1. மாலைதீவில் ஜனாஸா அடக்கம் செய்யப்படுவது தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் ACJU போன்ற அமைப்புக்கள் தமது நிலைப்பாடுகளை வெளிப்படையாக தெளிவுபடுத்துவதோடு

மாலைதீவு தூதுவரலாயத்திற்கும் அறிவித்தல்.


2. ஜனாஸா எரிப்பு தொடர்பில் மக்களின் வலிகளை அமைதியான முறையில் வினைத்திறனாக வெளிப்படுத்தல். இதனை கூட்டாக செயற்படுத்தல்.


முதற்கட்டமாக ஜனவரி 5 இல் பாராளுமன்றம் கூடும் போது முஸ்லிம் எம்பிக்கள் கபன் சீலை கொண்டு சமூகத்தின் வலிகளை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தல்.


அதற்காக ஒவ்வோர் ஊரிலும் சிவில் அமைப்புகள் எமது அரசியல் தலைமைகளை வலியுறுத்தல்.


வலிகளை வெளிப்படுத்துவதில் கூட ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியமாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்