ஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு! இன்று நடந்தது என்ன?
December 01, 2020
0
ஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற நிலையில் குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதில்லையென தீர்மானித்துள்ளது நீதிமன்றம்.
இரு தரப்பு வாதங்களும் முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிபதிகள் குழு இம்முடிவை எட்டியுள்ளது.
மே மாதம் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கான விசாரணை கடந்த இரு தினங்களாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
