ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறை தள்ளப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு விடுலை கிடைக்கும்வரை கறுப்பு சால்வையை போர்த்திக் கொள்வதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் அதன்போதே தனது கழுத்தில் கறுப்பு சால்வையை போர்த்திக் கொண்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் குற்றவாளிகளைத் தண்டிப்பதாகக் கூறி ஆட்சிக்குவந்த அரசாங்கம், இன்று சந்தேக நபர்களை ஒன்றன்பின் ஒன்றாக விடுதலை செய்துவருவதாகக் குறிப்பிட்டார்.
