சிலோன் முஸ்லிம் ஊடக அனுசரணையில் TOI நிறுவனத்தின் நிதியுதவியுடன் 200க்கும் அதிகமான குடும்பங்களுக்கு அரிசி வழங்கி வைப்பு.

ADMIN
0


சிலோன் முஸ்லிம் இணையத்தின் ஊடக அனுசரணையில் TOI (Teaching Of Isalam) நிறுவனத்தின் நிதியுதவியுடன் நேற்று (14) நாரம்மல பெந்தனிகொட மக்களுக்கு அரிசி வழங்கி வைக்கப்பட்டது.

TOI நிருவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இப்திகார் ஸாதிக்கின் தூர நோக்கு சிந்தனையில் இன,மத பேதமின்றி நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா அசாதாரண சூழ்நிலையினால் பதிக்கப்பட்ட 200க்கும் அதிகமான வறிய குடும்பங்களுக்கு அரிசி வழங்கி வைக்கப்பட்டது.

TOI நிறுவனத்தின் அங்கத்துவரும் முன்னாள் வீமான படை அதிகாரியுமான அஸாம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிலோன் முஸ்லிம் ஊடக பிரதானி ரிம்சி ஜலீல் நரம்மலை கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பள்ளி நிருவாகிகள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



















Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default