ஹிஜாஸ் ஹிஸ்புல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது..!

NEWS
0


சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தன்னை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு, சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, மனுதாரர் தற்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மனுவை தொடர்ந்து முன்கொண்டு செல்லவேண்டிய அவசியம் காணப்படவில்லை என குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை மீளப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த கோரிக்கையை ஏற்ற மேன்முறையீட்டு நீதிமன்றம், ஆட்கொணர்வு மனுவை மீளப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default