இராகலையில் தீ விபத்து... 06 வீடுகள் சேதம்...

 





இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 9ஆவது இலக்க நெடுங்குடியிருப்பில் இன்று (26) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


இந்த தீ விபத்தில் குறித்த வீடுகளில் குடியிருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும் பெருமளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


மக்கள் ஒண்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.


இதுவரை எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லையெனவும், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இங்கு வரவில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என தெரிவித்த  இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்