பலத்த காற்றினால் மரம் விழுந்து வீடு சேதம் போக்குவரத்து,தடை கிண்ணியாவில் சம்பவம்

( ஹஸ்பர் ஏ ஹலீம்)




கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகரூப் நகரில் மரம் விழுந்து வீட்டுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று (25)மாலை வீசிய கடும் காற்றுக் காரணமாகவே வீட்டுக்கு முன்னால் இருந்த கத்தாப் மரம் முறிந்து விழுந்து வீட்டுக்குச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது


வீட்டின் கூரைப் பகுதி - பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் சுவர் வெடித்துக் காணப்படுகிறது


கொரோனா கட்டுப்பாடு காலத்தில் வேலைக்குச் செல்வதும் கஸ்டம் இந்த நேரத்திலே பலத்த காற்று வீசி வீட்டையும் சேதமாக்கி விட்டது


இந்த நிலைமையில் நாம் கஸ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்




இதே வேளை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பிள்ளையார் கோயிலில் உள்ள ஆலம் இன்று (26)இரவு 10.00 மணியளவில் பலத்த காற்றுக்கு முறிந்து விழுந்துள்ளது


சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்த மரம் முறிந்து
விழுந்துள்ளதனால் ஆலங்கேணி, ஈச்சந்தீவுக்கான மின்சாரப் துண்டிக்கப்பட்டுள்ளது


அத்துடன் ஈச்சந்தீவுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது


இதனால் ஈச்சந்தீவுப் பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.


ஆல மரத்தை அகற்றி போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்