நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் தளர்வின்றி எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இதேவேளை நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையினை எதிர்வரும் 31 மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி தற்காலிகமாக தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
நாட்டில் கடந்த 25 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னணியில் நாட்டில் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு தேசிய செயலணி மற்றும் சுகாதார அமைச்சுக்கிடையில் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்