காஸாவில் ஹமாஸ் இயக்க தலைவர் டாக்டர் யஹ்யா ஸின்வார் இன்றைய தினம் காஸா வீதிகளில் வலம் வருவதை படங்களில் காணலாம்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மூன்றாவது முறையாகவும் அவர் பொது இடங்களில் தோன்றியிருப்பதோடு காஸாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று விஜயம் செய்திருந்தார்.
சிறார்களும் இளவயதினரும் அவரோடு புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
ஹமாஸ் தலைவரும் ஜாலியாக கைலாகு கொடுத்ததோடு புன்னகையோடு புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
சியோனிச ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான யுத்தத்தில் வெற்றிபெற்று தான் காஸாவிலுள்ள தனது வீட்டிற்கு கால்நடையாக சென்றுகாட்டுவேன் என யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது ஹமாஸ் தலைவர் சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்