நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டஎச்சரிக்கை!




நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இக்கால கட்டத்தில், வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், அது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் குறித்த வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை பயணக்கட்டுப்பாடு அமுல்செய்யப்பட்டுள்ள காலப்பகுதியில் கிராம சேவகர் பிரிவொன்றில் தலா 2 வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்