அமைச்சர்கள் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை



அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதன்படி ,தலைமை செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அதன்போது , தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.


அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். தொகுதிக்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


மேலும் ,மிகச் சிறப்பாக செயல்பட்டு, மக்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விபரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்