ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமிலிருந்து ஒரு நீதியரசர் விலகினார்.



நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமிலிருந்து, உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா விலகியுள்ளார்.


தான் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டிருந்ததாகவும், தனிப்பட்ட காரணத்துக்காக இந்த வழக்கிலிருந்து விலகியதாக அவர் இன்று நீதிமன்றுக்கு அறிவித்தார்.


விஜித் மலல்கொட, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு தொடர்பான பரிசீலனை இடம்பெற்றது.


தாம் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறு கோரி, இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்