தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


கடந்த வாரம் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோரினால் குறித்த பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இந் நிகழ்வில் கலந்து கொண்ட 13 பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 


இவர்களை நீதிமன்றத்தின் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 


கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.