நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பயணத் தடையை
நீடிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
மேலும், பயணத்தடையை கடுமையாக அமுல்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயணதடை அமுல்படுத்தப்படும் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் உடல்நலம் குறித்து, அரசாங்கம் மேலதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

0 கருத்துகள்