புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி - தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை சந்திப்பு



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை (16) மாலை இடம்பெறவுள்ளதென கூட்டமைப்பு அறிவித்துள்ளது.



ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு, நாளை (16) மாலை 4 மணியளவில் இடம்பெறுமென கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை 2020 டிசம்பர் மாதம், தமிழ்த்​ தேசியக் கூட்டமைப்பு அனுப்பிவைத்தது. அதன்பின்னர், 2021 பெப்ரவரியில், நிபுணர் குழுவை சந்தித்தது. இதை முன்கொண்டு செல்வது சம்பந்தமாகவே ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்