சினோபார்ம் தடுப்பூசிகள் திருட்டு தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்.


 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 சினோபார்ம் தடுப்பூசிகளை திருடியமை தொடர்பில் ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். 


அதனடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தில் கடமையாற்றும் ஒருவர் மற்றும் வாகன ஓட்டுநர் ஒருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 


அத்துடன் சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்காக காலி குற்றத்தடுப்பு பிரிவின் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்