ஒன்லைனில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பில் கவனம்
செலுத்தப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, நாடாளுமன்றத்தில் இன்று (20) தெரிவித்தார்.
உலகின் ஏனைய நாடுகளின் நிலைமையும் கவனத்தில் எடுக்கப்பட்டே இவ்விடயம் ஆராயப்படுவதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
ஒன்லைன் சந்தையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து பல சிக்கல்கள் இருப்பதாக முஸம்மில் எம்.பி சுட்டிக்காட்டியதுடன்,
மின்வணிக வர்த்தகம் தற்போது வேகமாக வளர்ந்து வருவதாகவும், இது தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
